லட்டு சர்ச்சை - சபதம் எடுத்த முன்னாள் அறங்காவலர்!
லட்டில் கலப்படம் செய்திருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போகவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.
லட்டில் கலப்படம் செய்திருந்தால் நானும் என் குடும்பமும் நாசமாக போகவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.
வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டை சாப்பிட்ட தோஷம் விலகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
Sadhguru About Thirupathi Ladoo Issue : கோயில் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது வார்த்தைகளால சொல்லமுடியாத அளவிற்கு கேவலமான ஒன்று என தனது ஆதங்கத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் சத்குரு தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் - ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது. திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது
Pawan Kalyan on Tirupati Laddu Issue : திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் விலங்குகளில் கொழுப்புகள் உள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்பதாக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Deputy CM Pawan Kalyan on Tirupati Laddu : ''கடவுளே... கடந்த ஆட்சியாளர்கள் உமக்கு எதிராக செய்த பாவங்களைக் கழுவும் சக்தியை எனக்கு வழங்குங்கள் என்று பெருமாளிடம் கேட்க போகிறேன். கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்'' என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேவஸ்தான முக்கிய நிர்வாகிகள், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வறிக்கை உண்மை என்றால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நெய்வேத்திய பிரசாதம் தயாரிப்பிற்கும் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
Tamilisai Soundararajan on Animal Fat in Tirupati Laddu : திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஜூன், ஜூலையில் வாங்கப்பட்ட நெய்யில் கலப்படம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆய்வில் ஈடுபட்டார்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எங்கள் நெய்யின் தரத்தில் குறை இருப்பதாக நினைத்தால் அதை எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என நெய் சப்ளை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்
திருப்பதி லட்டு தொடர்பான எந்த ஆய்வுக்கும் தயார் என திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டை ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
’’தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும், அவர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயல்’’ என்று பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.