K U M U D A M   N E W S

பழமையான கோவில் பிரகாரத்திற்குள் திமுக கொடியுடன் கார்... ஆகம விதிமுறை மீறலா..? பொங்கிய பக்தர்கள்

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?...தொடர் கொலைகள் – இபிஎஸ் கண்டனம்

தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்

"வெறும் பொய்யும், புரட்டும்.." ஒரே போடாக போட்ட அண்ணாமலை

"வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு"

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசு.. தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள்..!

2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி நடத்தி வருகின்றனர்.

திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ சார்பில் கரூரில் 100-க்கும் மேற்பட்டோர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

86,000 ஏழைகளுக்கு பட்டா - முதலமைச்சர் அதிரடி

பட்டா வழங்கும் பணியை 6 மாதங்களில் செய்து முடிக்க 2 குழுக்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர்

திமுக அரசு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?" -EPS கேள்வி

"சுவிட்சர்லாந்தின் லாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் தமிழக அரசு முதலீடுகளை ஈர்க்காதது ஏன்?"

அரசுக்கு எதிராக போராட்டம்.. ஏபிவிபி அமைப்பினருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம் ..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி விவகாரம் தொடர்பாக மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - EPS கண்டனம் | Edappadi Palanisamy | ADMK

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை” - திமுக அரசுக்கு பன்னீர் செல்வம் கண்டனம்!

"சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை உலுக்கிய சம்பவம் - உச்சக்கட்ட கோபமான இபிஎஸ்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? - ஆ. ராசா, எம்.பி.

‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என ஆ. ராசா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முன்னே வந்த மிக முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த 2,877 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

"மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு திமுக அரசு” - ராஜன் செல்லப்பா

"மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு திமுக அரசு” - ராஜன் செல்லப்பா

சொத்து வரியை மீண்டும் உயர்த்திய திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

சொத்து வரியை உயர்த்தி மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று  குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#BREAKING : துணை முதலமைச்சராகும் உதயநிதி.. வெளியானது உறுதியான தகவல்

Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அரியலூரில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்!

அரியலூரில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார்.