பட்டாசு வெடிக்கலாம்... ஆனால் சத்தம் வரக் கூடாது.. புகை வரக் கூடாது.. தீபாவளிக்கு புது ரூல்ஸ்!
தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.3 முதல் ரூ.70 வரை அதிகரிப்பு
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026ல் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டு வரும் சூழலில், ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது கட்சியை வலுப்படுத்தும் முனைப்பில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் சீனியர்களின் பலரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம் - தமிழ்நாடு அரசு. 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
MDMK Vaiko on Tamil Nadu Fishermen Arrest : தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss : மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசு பள்ளிகளில் தொழில்பயிற்றுநர்களை உடனே நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு
Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Highway Department Posts : நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
தமிழக காவல்துறையில் புதிதாக சேர்ந்துள்ள 12 ஏஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
IPS officers transferred:தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன், அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் வாரிய விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்மைத் துறை கள ஆய்வு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
Chief Minister Stalin Inaugurates SIPCOT Workers Hostel in Tamil Nadu : தமிழ்நாடு அரசு சார்பில் சிப்காட் தொழிலாளர்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 17) திறந்து வைக்கிறார்.
Chief Minister Stalin Inaugurates Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
Naam Tamilar Seeman Criticized Tamil Puthalvan Scheme : ''நீங்கள் எந்த மொழி பேசுகிறீர்களோ, அதே மொழியில் தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு புரியும்'' என்று தனக்கே உரிய பாணியில் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.