K U M U D A M   N E W S

கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா, பசுமைவெளி!

சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Northeast Monsoon : நெருங்கும் வடகிழக்கு பருவமழை... ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

Northeast Monsoon : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார் 

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்? - தமிழக அரசு விளக்கம்

பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக சமூக வலைதளத்தில் வந்த செய்தியை நம்ப வேண்டாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

இபிஎஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1,331 விடுதிகளில் 98,909 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆதிதிராவிடர் மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  

பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவசர ஆலோசனை

சென்னை பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

The Goat Special Show : 'தி கோட்' - தமிழக அரசு திடீர் உத்தரவு

The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு.

The Goat Movie Release : கோட் பட பிளக்ஸ், பேனர் - நீதிமன்றம் உத்தரவு

The Goat Movie Release : விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள GOAT படத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதிக்கோரி மனு. பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

BREAKING | Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு

Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

BREAKING | TN Pongal Festival 2025 : பொங்கல் வேட்டி, சேலை - எத்தனை கோடி ஒதுக்கீடு தெரியுமா?

Vetti Saree in TN Pongal Festival 2025 : 2025 பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது