ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.
மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும். பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரி உட்பட 3000த்துக்கு மேற்பட்டோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தலைமைச் செயலகத்துக்கு வரும் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து பெறும் தபால்கள் மற்றும் கடிதங்களுக்கு இனி டிஜிட்டல் முறையில் பதில் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Govt Teachers Appointment Suspension : நிதி சிக்கல் காரணமாக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட நியமனங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.
Mysterious Fever in Madurai : மதுரையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவ மழை பெய்யும் காலங்களில் காய்ச்சல் அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.