தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை
வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.