#breakingnews: சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி
உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Senthil Balaji Bail Condition Details in Tamil : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் கைதான செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது. இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது.
Senthil Balaji Case Update : ''இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும்'' என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
Savukku Shankar Case Update : இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜாமீன் வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன்? என நீதிபதிகள் தமிழ்நாடு காவல் துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பும் நோக்கமின்றி அவற்றை சேமித்து வைத்து னிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பை தவறு என கூறி ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
SC Youtube Hacked: உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்
உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
Caste wise Census in India:சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என ஆந்திரா அரசு RTI மூலம் தகவல் தெரிவித்ததால் தமிழ்நாடு அரசுமீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Kolkate case update: கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.
SC dismissed caste wise census PIL: சமூக, சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
Supreme Court Issued Guidelines for High Court Judges Pension : உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது
''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Savukku Shankar Case : உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
Ex Minister Senthil Balaji Case : செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் வாதத்தில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
Neet Exam Hearing In Supreme Court : ''இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.