நந்தன் திரைப்படம் ஓடிடி அப்டேட்... எங்கே? எப்படி பார்க்கலாம்?

சசிக்குமார் நடிப்பில் ஈ.ரா.சரவணன் இயக்கத்தில் அண்மையில் வெளியான நந்தன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

Oct 12, 2024 - 14:41
 0
நந்தன் திரைப்படம் ஓடிடி அப்டேட்... எங்கே? எப்படி பார்க்கலாம்?
நந்தன் திரைப்படம் ஓடிடி அப்டேட்... எங்கே? எப்படி பார்க்கலாம்?

சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கிய அவர், அதன்பின்னர் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஹீரோ உட்பட பல கேரக்டர்களில் நடித்துள்ள சசிகுமார் கரியரில், ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. அதேநேரம் சசிகுமாருக்கு பெரிதாக நடிக்கத் தெரியவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து நந்தன் படத்தில் கம்பேக் கொடுத்துள்ளார் சசிகுமார். கடந்த சில வாரங்கள் முன்பு வெளியான நந்தன் படத்தில் சசிகுமாரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியிருந்தனர். 

சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நந்தன் திரைப்படத்திற்காக தனது கெட்டப் தொடங்கி குணாதிசயம் வரை மாற்றியிருக்கிறார் சசிகுமார். இதுகுறித்து அண்மையில் பேசிய இப்படத்தின் இயக்குநர் ஈ.ரா.சரவணன், “பற்கள் கறை பிடிக்க வெற்றிலைக்குப் பழக்கமானார். “கேரவன் ஏறவேகூடாது” என்பேன். ஷாட் முடிந்தும் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து இருப்பார். க்ளைமாக்ஸ் காட்சிகள் படமான போது சசிகுமார்(Sasikumar) சாரிடம் பேசுவதையே நான் தவிர்த்தேன். 

என் உதவியாளர்கள் மூலமாகவே சேதி சொல்வேன். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை எடுத்து முடிக்கும் வரை நான் மிருகம். வேடிக்கை பார்த்தவர்கள்கூட என்னைத் திட்டித் தீர்த்தார்கள். சசிகுமார் சார் எதுவுமே சொல்லவில்லை. மூங்கில் கம்பு தோள் பட்டையைக் கிழித்து கொட்டியது ரத்தம். தென்னை மட்டை நடு முதுகில் விழுந்ததில் முதுகு முழுக்கக் காயமாகி, சசி சாருக்கு ஜுரம் வந்தது” என அவரது அற்பணிப்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். 

இத்திரைப்படம் தங்களை வெகுவாக பாதித்தது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி நந்தன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தக் காணத் தவறியவர்கள் ஓடிடி தளத்தில் கண்டு களிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow