எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆகிட முடியுமா? RJ பாலாஜியின் பேச்சால் பரபரப்பு!
விஜய் டிவிக்குள் சென்றாலே சிவகார்த்திகேயனை போல் ஆகிவிட முடியாது என RJ பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
ஒரு RJ-வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கியவர் RJ பாலாஜி. அதன்பின்பு ‘நானும் ரவுடிதான்’, ‘கவலை வேண்டாம்’, ‘தேவி’ உள்ளிட்ட படங்களில் காமெடியனாகக் கலக்கி வந்தவர், மெல்ல மெல்ல வளர்ந்து எல்கேஜி, வீட்ல விஷேஷம், சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து முத்திரை பதித்தார். 2020ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் மூலம் ஒரு இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தனது ஸ்பாட் கவுண்டர்களினாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, மக்களின் மனங்களிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் RJ பாலாஜி.
இந்நிலையில் தற்போது ‘சொர்க்கவாசல்’ என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார் RJ பாலாஜி. பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதான் இயக்கும் இப்படத்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. RJ பாலாஜி என்றாலே காமெடிதான் என்ற மக்களின் எண்ணத்தை இப்படத்தின் ட்ரெய்லர் உடைத்தெறிந்திருக்கிறது என்றே கூறலாம். மத்திய சிறைச்சாலையை மையமாகக் கொண்டு 1999ல் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய RJ பாலாஜி, “விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் மாதிரி வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படியெல்லாம் யாராலும் வரமுடியாது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் மிக சிறப்பான வேலை மற்றும் திறமையை வெளிப்படுத்தினார். மக்கள் அனைவருக்கும் பிடித்தது . இதனால் மட்டுமே விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். விஜய் டிவிக்குள் சென்றாலே சிவகார்த்திகேயனை போல் ஆகிவிட முடியாது” எனக் கூறினார்.
‘சொர்க்கவாசல்’ படத்தில் செல்வராகவன் ‘ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அண்மைக் காலமாகவே செல்வராகவன் பூமர் போல் படங்களில் நடித்து வருகின்றார் என்ற பெயர், ‘சொர்க்கவாசல்’ படத்தின் மூலம் மாறும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதே போல் RJ பாலாஜியின் கடைசி இரண்டு படங்களான ‘ரன் பேபி ரன்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’ படங்கள் அவருக்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.
What's Your Reaction?