Monkey Pox Guidelines : அச்சுறுத்தும் குரங்கு அம்மை; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை
Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : 2020ஆம் ஆண்டு உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸால் பல லட்ச மக்கள் உயிரிழந்தனர். தற்போது அதே வரிசையில், எம்.பாக்ஸ் அல்லது குரங்கம்மை எனப்படும் புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த குரங்கம்மை வைரஸ்(Monkey Pox) தற்போது வரை 537 பேரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வந்த இந்த வைரஸ் தற்போது 116 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160% அளவுக்கு குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை(Monkey Pox) நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடிகாக அறிவிக்க ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் வலியுறுத்தியதையடுத்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. “இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தற்போது பரவி வரும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும்” என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
குரங்கம்மை பரவுவது எப்படி?
குரங்கம்மை(Monkey Pox) நோய்த்தொற்று உள்ளவருடன் நெருக்கமாகக் பழகுவதன் மூலம் இந்த வைரஸ் எளிதாகப் பரவுகிறது. அதாவது, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது, தோலோடு தோல் உரசுவது, அல்லது அந்த நபருடன் நெருக்கமாகப் பேசுவது, சுவாசிப்பது ஆகிய செயல்களின் மூலம் இந்தத் தொற்று பரவும். தோலில் இருக்கும் பிளவுகள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலில் நுழையும் அபாயத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் படிந்திருக்கும் படுக்கை, ஆடைகள், துண்டுகள் போன்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. மேலும் குரங்கு அம்மை நோய் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை அறிகுறிகள்:
காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை இந்த வைரஸின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்(Monkey Pox Symptoms in Tamil). காய்ச்சல் நின்றவுடன் தடிப்புகள் தோன்றலாம். பெரும்பாலும், முகத்தில் இது தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் வரை பரவும். இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை(Monkey Pox Disease) நோய் தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ள பொதுசுகாதாரத் துறை, நோய் தடுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்றின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், விமான நிலைய சுகாதார அதிகாரிகள் மற்றும் துறைமுகங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யவும், அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தோல் அரிப்பு, 2 முதல் 4 வாரம் நீடிக்கும் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சோர்வு ஆகியவை குரங்கு அம்மைக்கான அறிகுறி என்றும், பாதிக்கப்பட்டோருடன் நேரடி தொடர்பை தவிர்த்தல், தடுப்பூசி மூலமாக தற்காத்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
குரங்கு அம்மை - "கன்பார்ம் உயிர் போகும்..!" - தமிழ்நாட்டுக்கு ஆபத்தா..? | Kumudam News 24x7#monkeymeasles #virus | #tamilnadu | #who | #india | #doctors | #kumudam | #kumudamnews24x7 pic.twitter.com/HZ8EYF6AzK — KumudamNews (@kumudamNews24x7) August 16, 2024
What's Your Reaction?