தமிழ்நாடு

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று ( டிச.11 ) மற்றும் டிசம்பர் 12 ஆம் தேதியான நாளையும், குறுகிய நேரத்தில் அதீத கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 

சென்னையில் இன்றும் நாளையும் விட்டுவிட்டு கனமழை பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.  மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால்,  டிசம்பர் 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கனமழை பதிவாகும் என்று கூறப்படுகிறது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து மிக மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய பாக் நீர் இணைப்பு கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை அதே இடத்தில் நிலை கொண்டு, சற்று தீவிரமடைந்த பிறகு டிசம்பர் 13ஆம் தேதி அன்று வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வரக்கூடிய 36 மணி நேரத்தில்( 12ஆம் தேதி இரவு வரை) டெல்டா மாவட்டங்களான காரைக்கால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் மிக கனமழை எதிர்பார்க்கலாம். ஒரு சில இடங்களில் அதீத கன மழை பெய்யக்கூடும். மேலும் தஞ்சாவூர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

டெல்டா பகுதியில் நிலை கொள்ளும் என்பதால் வடகிழக்கு காற்றுக் குவிதல் வட கடலோர மாவட்டங்களின் மீது விழும். இதனால் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரக்கூடிய இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்தாலும் கூட பாதிப்பின் அளவு பெரிதாக இருக்கும். இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்பு இல்லை என்றாலும், டெல்டா மாவட்டங்களில் 25 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம் தேதி இரவு முதல் 12 ஆம் தேதி இரவு வரை குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கடையுடன் இருக்க வேண்டியது அவசியம். சென்னையில் இன்றும், நாளையும் விட்டுவிட்டு கனமழை பதிவாகும். ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

சென்னை துவங்கி புதுச்சேரி வரையிலான வடக்க கடலோர மாவட்டங்களில் தரைக்காற்றின் அளவு அதிகமாக காணப்படும். காற்றின் வேகம் இன்று இரவு முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். டிசம்பர் 14ஆம் தேதி பாக்கெட் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக ஒரு டிசம்பர் 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மீண்டும் அடுத்தசுற்று மழை பொழிவை எதிர்பார்கலாம். தமிழகத்தில் 20ஆம் தேதி வரை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சற்று எச்சரிக்கைகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.