நாதக நிர்வாகி படுகொலையில் திடீர் திருப்பம்.. உறவினரே கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்...

NTK Balasubramanian Death in Madurai : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே, பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Jul 16, 2024 - 19:42
Jul 18, 2024 - 10:43
 0
நாதக நிர்வாகி படுகொலையில் திடீர் திருப்பம்.. உறவினரே கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்...
கூலிப்படை கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியன்

நாம் தமிழர் நிர்வாகி வெற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, சொத்து பிரச்சனையால் உறவினரே 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை வைத்து படுகொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

NTK Balasubramanian Death in Madurai : மதுரை மாநகர் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாநகர் வடக்கு தொகுதி துணைச் துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். பாலசுப்பிரமணியன் இன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் மதுரை வல்லபாய் சாலையில் அமைந்துள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே கொலை செய்ய விரட்ட தொடங்கியுள்ளது.

உயிரைக் காப்பாற்ற பாலசுப்பிரமணியன் ஓட தொடங்கிய நிலையில் வழி மறித்த அக்கும்பல் பாலசுப்ரமணியனை கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலசுப்ரமணியன் எதற்காக கொல்லப்பட்டார்.? முன்விரோதமா.? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரையில் நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியன் பைனான்ஸ் மற்றும் பணம் கொடுத்து வட்டிக்கு விட்டு அதனை கறாராக வசூல் செய்பவர் என்பதாலும், 2012ஆம் ஆண்டுக்கு முன்பு, அவர் மீது கொலை வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாம் தமிழர் நிர்வாகி பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம், குடும்ப தகராறில் இருந்த சொத்து பிரச்சனை காரணமாக, உறவினரே 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை வைத்து படுகொலை செய்ததாக காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow