சென்னை நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி வீட்டில் கோபித்து கொண்டு கடந்த 8ஆம் தேதி வெளியேறி விட்டார். நந்தம்பாக்கம் பகுதியில் நின்றிருந்த சிறுமியிடம் கார் ஓட்டுனரான கடலூரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவர் வந்து சவாரி வேண்டுமா என கேட்டதாக தெரிகிறது.
அப்போது சிறுமி, "தனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை என்றும், தான் நந்தம்பாக்கத்தில் உள்ள அத்தை வீட்டில் தங்கி வந்ததாகவும் கூறியதாக தெரிகிறது. மேலும், அத்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாகவும் கூறியதாக தெரிகிறது. தனக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்று கார் ஓட்டுனர் பாக்யராஜ் கேட்டதாக கூறப்படுகிறது.
அவர் சிறுமியை பேருந்து மூலம் உளுந்தூர்பேட்டை வேப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர் பரமசிவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் பரமசிவன் எந்த வேலையும் இல்லை என கூறி சென்னைக்கே மீண்டும் அனுப்பி வைத்தார். சென்னை வந்த சிறுமி கார் ஓட்டுனர் பாக்யராஜை சந்தித்து பேசினார். ஆனால் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அனுமதிக்க வில்லை.
இதனால் சிறுமியை பாக்யராஜ் தனது காரிலேயே தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி பரமசிவன் சிறுமியை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையல்காரர் பாபுவிடம் அனுப்பி வைத்துள்ளார். அவர் சிறுமியை திருவான்மியூர் பகுதியில் சமையல் வேலை செய்யும் கருணாநிதியிடம் அனுப்பி வைத்தார். அவர் துரைப்பாக்கத்தில் உள்ள மகளிர் விடுதியில் அன்று தங்க வைத்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி திருவான்மையூரில் இருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு பம்மலில் உள்ள சாதனா என்பவரிடம் கருணாநிதி ஒப்படைத்துள்ளார். பாபு சிறுமியின் அத்தையின் செல்போன் எண்ணை வாங்கி பேசி உள்ளார். சிறுமி குறித்து தெரிவித்த உடன் நந்தம்பாக்கம் போலீசார் உதவியோடு சிறுமி பம்மல் பகுதியில் வைத்து மீட்டனர்.
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கார் ஓட்டுனர் பாக்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி குறித்து முறையாக போலீசாருக்கு தெரிவிக்காமல் இருந்ததால் கார் ஓட்டுனர் பரமசிவன், சமையல்காரர்கள் பாபு, கருணாநிதியிடம் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.