வடசென்னையின் பிரபல ரவுடியான ராஜேந்திரன் என்ற சேரா வியாசர்பாடி பிவி காலனியில் வசித்து வந்தார். இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளது. கொடுங்கையூர், எம்.கே.பி நகர், ஆர்.கே.நகர், வடக்கு கடற்கரை காவல் நிலையம், மாதவரம், செம்பியம் ஆகிய காவல் நிலையங்களிலும் இவர் மீது வழக்குகள் உள்ளது.
பிரபல ரவுடியான சேரா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகிவிட்ட நிலையில் எங்கு தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, 24 ஆண்டுகளுக்கு பிறகு தலைமறைவாக இருந்த ரவுடி சேராவை புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் முத்துகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரவுடி சேரா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பதுங்கி இருந்த ரவுடி சேராவை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைதான அவரை தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ரவுடி சேரா மீது ஆயுத தடைச் சட்டம், போதைப்பொருள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more:-
போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?