மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Dec 12, 2024 - 12:33
 0
மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலையில் வருடந்தோறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மலைசரிவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது வரை விட்டுவிட்டு மழை பெய்து வரும் காரணத்தால், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் அன்று மலையேற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் முக்கிய நாளான மகா தீபம் 13-ஆம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்கு முந்தைய ஆண்டு மலையேற 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்த துயர சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை தொழில் நுட்ப வல்லுனர் குழு எட்டு பேர் மலையில் ஆய்வு நடத்தினர்.

அதன் அடிப்படையில் ஈரப்பதம் பாறை உருளும் தன்மை மண் சரிவு நடக்கும் பாதையில் வழுக்கும் என்பதால் பக்தர்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை எடுத்துள்ளனர். மேலும் மலை ஏறுபவர்களின் குடும்பத்திற்கு இண்ணல் ஏற்படக்கூடாது எனவே இந்த ஆண்டு மலையேற தீபம் ஏற்றும் பணியாளர்களை தேவையான எண்ணிக்கை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ குழு,தீயணைப்புத் துறையினர்,வனத்துறையினர் உடன் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மலையில் தீபம் ஏற்றுபவர்கள் நடந்து செல்லும் வழக்கமான இரண்டு பாதையில் ஒரு பாதை உறுதி தன்மையோடு உள்ளதால் அந்த வழியை அவர்கள் சென்று வருவார்கள் மலை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மலையேற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

வனத்துறை மற்றும்  காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும்,இதை மீறி பொதுமக்கள் யாரேனும் மலையேறினால் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் தீபத் திருவிழாவை முன்னிட்டு 24 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு குடிநீர், கழிவறை, அறிவிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது மேலும் வழக்கத்தை விட 20 சதவீதம் கூடுதலான இடங்களில் கார் பார்க்கிங் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது,அந்த பகுதியில் இலவச கழிப்பிடம் தவிர்த்து , மகளிர் சுய உதவிக்கு குழு பராமரிக்கும் கழிவறைகளில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது வழக்கமாக அனுமதிக்கப்படும் எண்ணிக்கையிலான நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow