Bank Loan Fraud Case in Chennai : அமெரிக்கா சென்றவர் பெயரில் வங்கிக் கடன்.. பணத்தை கட்டாமல் டிமிக்கு கொடுத்த பலே கில்லாடி கைது

Bank Loan Fraud Case in Chennai : வெளிநாடு சென்றிருந்தவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் பெற்று மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Aug 15, 2024 - 23:58
Aug 16, 2024 - 22:23
 0
Bank Loan Fraud Case in Chennai : அமெரிக்கா சென்றவர் பெயரில் வங்கிக் கடன்.. பணத்தை கட்டாமல் டிமிக்கு கொடுத்த பலே கில்லாடி கைது

Bank Loan Fraud Case in Chennai : சென்னையை சேர்ந்த செந்தில்குமார் [வயது 43], கடந்த 2006ம் ஆண்டு மயிலாப்பூரில் இயங்கிவரும் தனியார் வங்கிக் கிளையில், வங்கிக் கணக்கினை தொடங்கியுள்ளார். பின்னர் 2009ம் ஆண்டு பணிமாறுதலில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அந்த வங்கி கணக்குடன் மனுதாரரின் செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளது.

பின்னர், 2021ம் வருடம் ஜீலை மாதம் மேற்படி வங்கி கணக்கில் செந்தில்குமாரின் அனுமதியில்லாமல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனிநபர் கடனாக ரூ.3,00,000/- பெற்று, வங்கி கணக்கிலிருந்த பணத்தையும் சிறிது சிறிதாக எடுத்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி கடனுக்கு பெற்ற சந்தா தொகையை செலுத்தாததாலும், வங்கி கணக்கில் பணமில்லாததாலும் வங்கி நிர்வாகம், அந்த கடன் தொகையை செலுத்துமாறு செந்தில்குமாரின் நிரந்தர முகவரியான சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, கடந்த 21.04.2023ஆம் தேதி அன்று செந்தில்குமார் சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது வங்கி கணக்கிலிருந்து தனக்கு தெரியாமல் தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து கடன் தொகை பெற்று மோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனு அளித்துள்ளார். 

புகாரின் பேரில் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் புகார்தாரர் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் மற்றும் குற்றவாளி பயன்படுத்திய செல்பொன் எண், இ-மெயில் முகவரி மற்றும் இணையதள விவரங்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்த ராஜ்கமல் [வயது 37] என்பவரை நேற்று (14.08.2024) ஆம்பூரில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி ராஜ்கமல் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow