விளக்கேற்றும் போது புடவையில் தீ.. தொலைக்காட்சி ஊழியரின் தாய் உயிரிழப்பு

சாமி படத்திற்கு விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

Nov 27, 2024 - 22:53
Nov 27, 2024 - 22:59
 0
விளக்கேற்றும் போது புடவையில் தீ.. தொலைக்காட்சி ஊழியரின் தாய் உயிரிழப்பு
விளக்கேற்றும் போது புடவையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழப்பு

சென்னை விருகம்பாக்கம் சாய் நகர் அனெக்ஸ் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் 83 வயதான மூதாட்டியான கனகா. இவரது பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி அவர்களது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக மூதாட்டி தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தினந்தோறும் மூதாட்டி வீட்டின் சாமி படத்திற்கு விளக்கேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நேற்று படத்திற்கு விளக்கேற்றி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் புடவையில் தீப்பற்றிய நிலையில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்ததாக தெரிகிறது.

பின்னர், மூதாட்டியின் வீட்டிற்கு உணவு அளிப்பதற்காக சுரேஷ் என்பவர் வந்தபோது மூதாட்டி எரிந்து இறந்த நிலையில் கிடந்துள்ளதை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மூதாட்டி கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே. நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூதாட்டி பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளர் விஜயகுமாரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow