Indian 2: இந்தியன் 2 Edited வெர்ஷன்... இந்த சீன்லாம் தூக்கிட்டா படத்துல எதுவுமே இருக்காதே!

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை எடிட் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஆனால், இந்தியன் 2-வில் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் எது என ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

Jul 18, 2024 - 16:25
Jul 19, 2024 - 15:37
 0
Indian 2: இந்தியன் 2 Edited வெர்ஷன்... இந்த சீன்லாம் தூக்கிட்டா படத்துல எதுவுமே இருக்காதே!
Indian 2 Box Office Day 6

சென்னை: இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தை இயக்கினார் ஷங்கர். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2, பல தடைகளை கடந்து சென்ற வாரம் ரிலீஸானது. கமல், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத் இந்தியன் 2 படத்துக்கு இசையமைத்தார். இந்நிலையில் ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.  

முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கில் தடுமாறி வரும் இந்தியன் 2 படத்தை நெட்டிசன்களும் விடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். விக்ரம் படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த கமல், இந்தியன் 2 தோல்வியால் தடுமாறி நிற்கிறார். இதில் இந்தியன் 3ம் பாகம் வேறு அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் இதுவரை 70 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்த இந்தியன் 2, அதற்கடுத்த நாட்களில் மிக மோசமான சரிவை சந்தித்தது. அதன்படி இரண்டாவது நாளில் 18 கோடியும், மூன்றாவது 15 கோடியும் வசூலித்தது. 

நான்காவது நாளில் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ள இந்தியன் 2, 5வது நாளிலும் அதே 3 கோடி ரூபாயுடன் முடங்கியது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்றும் இந்தியன் 2 கலெக்ஷன் 3 கோடி ரூபாய் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தியன் 2 ரன்னிங் டைம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக இருப்பதால், 12 நிமிடங்களை படக்குழு எடிட் செய்துள்ளது. அப்படியிருந்தும் இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய ரீச் இல்லை. இந்நிலையில், இந்தப் படத்தால் பாதிக்கப்பட்ட ரசிகர் ஒருவர், இந்தியன் 2 எடிட்டட் வெர்ஷன் என ஒரு போஸ்டரை வெளியிட்டு தக் லைஃப் கொடுத்துள்ளார். 

அதில், இந்தியன் 2 படத்தில் இருந்து மொத்தம் 112 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது சித்தார்த் வரும் அனைத்துக் காட்சிகளையும் தூக்கிவிடலாம். அதேபோல், கிளைமேக்ஸில் வரும் வீலிங் சீன், பாபி சிம்ஹா காட்சிகளுக்கும் கட் போட்டு விடலாம் என்றுள்ளார். முக்கியமாக வர்ம கலை குறித்து வரும் வசனம், அனிருத்தின் பின்னணி இசை, கமல் பூனை மாதிரி மியோவ் என மிமிக்ரி செய்யும் காட்சி இவை அனைத்தையும் மியூட் செய்துவிடலாம் என குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக இந்தியன் தாத்தா சேனாபதியின் கெட்டப்பை பிளர் செய்துவிட்டு, இந்தியன் 3 ட்ரெய்லர், டைட்டில் கார்டில் வரும் இயக்குநர் ஷங்கரின் பெயர் ஆகியவற்றையும் எடிட்டிங்கில் தூக்கிவிட்டால், படத்தின் ரன்னிங் டைம் 1 மணி நேரம் ஆகிவிடும் என பங்கமாக கலாய்த்துள்ளார்.

இந்தியன் 2 படம் வெளியானதில் இருந்தே இயக்குநர் ஷங்கர் மீது அதிகளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வாட்ஸப்பில் வந்த ஃபார்வேர்ட் மெசேஜ் எல்லாவற்றையும் வைத்து படத்தை மொக்கை செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வந்தனர். அதேபோல், சித்தார்த்தின் ஆக்டிங் சுத்தமான கிரிஞ்ச் மெட்டீரியல் என்றும், இந்தியன் தாத்தாவுக்கு இத்தனை கெட்டப் போட்டதெல்லாம் வேஸ்ட் எனவும் விமர்சனங்கள் வந்தன. இதையெல்லாம் மனதில் வைத்து இந்தியன் 2 எடிட்டட் வெர்ஷனையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow