Saripodhaa Sanivaaram Movie Twitter Review Tamil : டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நானி, மீண்டும் ஆக்ஷ்ன் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் சரிபோதா சனிவாரம். விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நானி ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லன் கேரக்டரிலும் நடித்துள்ளனர். நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். நானி – விவேக் ஆத்ரேயா கூட்டணியில் வெளியான அடடே சுந்தரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பின்னர் சரிபோதா சனிவாரம் படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று ரிலீஸான சரிபோதா சனிவாரம்(Saripodhaa Sanivaaram) படத்திற்கும் டோலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக கோபக்காரரான நானியிடம், அவரது அம்மா உயிரிழக்கும் போது ஒரு சத்தியம் வாங்குகிறார். அந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காக 6 நாட்கள் அமைதியாக இருக்கும் நானி, சனிக்கிழமை வந்துவிட்டால் ஆக்ஷனில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் நானி. இதில் போலீஸ் ஆபிஸர் எஸ்ஜே சூர்யாவையும் நானி பொளந்து கட்டும் சூழல் உருவாகிறது. நானிக்கும் எஸ்ஜே சூர்யாவுக்கும் என்ன பிரச்சினை? ஏன் சனிக்கிழமை மட்டும் நானி ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார் என்பது தான் கதை.
இந்த ஒன்லைன் ஸ்டோரியில் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், எஸ்ஜே சூர்யாவின் மிரட்டலான வில்லத்தனமும், நானியின் ஹீரோயிசமும் விருந்தாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரியங்கா மோகன் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும், அழகு பதுமையாக வலம் வருவதும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாம். சரிபோதா சனிவாரம் வழக்கமான கமர்சியல் படமாக இருந்தாலும், சனிக்கிழமை ஆக்ஷன் கான்செப்ட் ரசிக்கும்படி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். நானி, எஸ்ஜே சூர்யா ஆக்டிங், ஆக்ஷன் சீன்ஸ், சினிமோட்டோகிராபி, எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல், ஜேக்ஷன் பிஜோய்யின் பிஜிஎம் மிரட்டலாக உள்ளதாகவும் டிவிட்டர் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். இந்தப் படத்தின் முதல் பாதி ஆவரேஜ் தான், இரண்டாம் பாதி கொஞ்சம் நன்றாக வந்துள்ளது. எஸ்ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு தான் படத்தின் பெரிய பலமே, நானி, பிரியங்கா மோகனும் சிறப்பாக நடித்துள்ளனர். ஆனால், படத்தின் நீளம் தான் கொஞ்சம் அதிகமாக உள்ளது, 2.45 மணி நேரம் ரன்னிங் டைம்-ஐ குறைக்கலாம் எனவும் நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நானி – எஸ்ஜே சூர்யா இடையேயான காட்சிகள் தியேட்டர் மெட்டீரியலாக அமைந்துள்ளன. ஜேக்சன் பிஜோய் பின்னணி இசையும் மிரட்டல் ரகம் என தெரிவித்துள்ளனர்.
சரிபோதா சனிவாரம் படத்தின் ஸ்டோரி லைன் சூப்பர் என சோஷியல் மீடியா ட்ராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். நானி பெர்ஃபாமன்ஸ் சிறப்பு, பிரியங்கா மோகன் நடிப்பு ஓகே ரகம் தான், ஆனால் எஸ்ஜே சூர்யா தான் படம் மொத்தத்தையும் தோளில் சுமக்கிறார். இடைவேளை சண்டைக் காட்சியும், அதன் கேமரா ஒர்க்கும் அட்டகாசம், ஆனால், கிளைமேக்ஸ் நீளம் அதிகம் என்றும், கிரிஞ்ச் மாதிரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நானி – எஸ்ஜே சூர்யா இடையேயான ஃபேஸ் ஆஃப் காட்சி தரமாக உள்ளது, மற்றபடி சரிபோதா சனிவாரம் நார்மல் மூவி தான் என விமர்சித்துள்ளார். இந்தப் படம் சூர்யாவின் சனிக்கிழமை என்ற டைட்டிலில் தமிழிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.