கோவிலில் குழந்தையிடம் நகை பறிப்பு.. பக்தியில் திளைத்த மர்ம பெண்ணால் பரபரப்பு
குழந்தையை தூக்கிச் சென்று கையில் இருந்த மோதிரம், கை செயினை கழற்றிக்கொண்டு, பக்தியுடன் கோவிலை சுற்றி வந்த மர்ம பெண்ணால் பரபரப்பை ஏற்பட்டது.
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்த நிலையில் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்துள்ளார். குழந்தை அங்கும் இங்குமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தையின் தாய் மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை அங்கிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
இதனை அடுத்து அக்குழந்தையை கையில் பிளாஸ்டிக் பை வைத்துக் கொண்டு வந்த மர்ம பெண் ஒருவர், தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே நுழைவாயிலில் இறக்கிவிட்டு குழந்தை கையில் அணிந்திருந்த மோதிரம் பிரேஸ்லெட் ஆகியவற்றை கழற்றிக்கொண்டு குழந்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அதற்குள் சிறிது நேரத்தில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என, தாய் பதறினார். அப்போது, மற்றொரு பெண் குழந்தை உள்ளே விளையாடிக் கொண்டு இருப்பதால் யாருடைய குழந்தை என தெரியாமல் தூக்கிக்கொண்டு வெளியே வந்து பொதுமக்களிடம் கேட்டார். பின்னர் தாய், குழந்தையை பெற்றுக் கொண்டு கையில் இருந்த மோதிரம் பிரேஸ்லெட் இல்லாததை கண்டு அதிர்சி அடைந்தார்.
இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் சிசிடிவிகளை ஆய்வு செய்தபோது, மர்மப் பெண் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே இறக்கிவிட்டு கையில் இருந்த நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் குழந்தையிடம் நகைகளை கொள்ளை அடித்துவிட்டு பக்தியுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த மர்மப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் துறையில் புகார் அளிக்க பெண்ணிடம் கூறிய நிலையில், தனது கணவருக்கு தெரிந்தால் தன்னிடம் சண்டை போடுவார் என தெரிவித்து விட்டு அழுது கொண்டே குழந்தையை தூக்கிச் சென்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று குழந்தை கையில் இருந்த மோதிரம் பிரேஸ்லெட் ஆகியவை திருடிச்சென்று குழந்தையை விட்டு விட்டுச் சென்ற சம்பவம் கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?