மிஷ்கின் + மேடை பேச்சுகள்... மரண கலாய் கலாய்க்கும் மீம் கிரியேட்டர்ஸ்...!
அண்மைகாலமாக இயக்குநரும் நடிகருமான மிஷ்கினின் பேச்சுகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்படுகின்றன. அதோடு மீம் மெட்டீரியலாகவும் அவைகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அதுபற்றிய ஒரு சிறிய தொகுப்பை காண்போம்.
இயக்குநர் மிஷ்கின் பல படங்களின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், தனது படங்களை விளம்பரப்படுத்துவது என தன்னுடைய படைப்புகளுக்காக சர்ச்சையான சில விஷயங்களை பேசி ப்ரோமோஷன் செய்துவிடுவார். இவருடைய நேர்காணல்களிலும் அந்த சாயல் வெளிப்படும். ஏதோ Parallel Universeல் பயணிப்பவர் போன்று, தனக்கென தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இளைஞர்களுக்கு அவ்வப்போது அட்வைஸ்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், மற்ற இயக்குநர்களின் படத்திற்கான ப்ரோமோஷன்களில் இறங்கியுள்ள மிஷ்கின் பேசும் பேச்சுகள் டிரெண்டிங் மீம் மெட்டிரியலாக மாறி வருகிறது. தி ப்ரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், ”கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க... ஒரு குடும்பத்தில் 5 பேர் போய் படம் பார்க்கலனா அது குடும்பமே இல்ல... வெங்காயம் வெட்டிக்கிட்டு, புருஷன் கூட சண்டப்போட்டுகிட்டு படம் பாப்பீங்களா.. இல்ல ஜம்முனு தியேட்டர்ல போய் பாப்கார்ன் வாங்கிகொண்டு படத்தை பார்ப்பீர்களா? என்னை பொறுத்தவரை சிவாஜி கணேசன் தான் சிவன்” என்று பேசினார்.
மிஷ்கினின் இந்த பேச்சு பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளான நிலையில், அண்மையில் நடந்த கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், கொட்டுக்காளி படம் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் ஆடை இல்லாமல் கூட நான் இங்கே டான்ஸ் ஆட தயார் என்றும், அப்படி ஆடினால் உங்களால் பார்க்க முடியுமா? என்றும் கூறியிருந்தார். மிஷ்கின் திடீரென இப்படி பேசியதையே தாங்காமல் ஷாக்கான ஆடியன்ஸ் அதிலிருந்து மீண்டு வருவதற்குள், “இந்தப் படத்தின் ஒரு காட்சியில் சூரி உச்சா போய்க் கொண்டிருப்பார். அப்போது இயக்குநர் கேமராவை அப்படியே அருகில் கொண்டு செல்லும்போது, அந்தக் காட்சியில் சூரி நடிக்கவே இல்லை, அவர் வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு நடிப்பு எவ்வளவு நம்பிக்கை கேமரா மேல்..” என்று கூறியிருந்தார்.
இதை கேட்ட நெட்டிசன்கள், உச்சா போவதில் என்னய்யா கலைநயம் இருக்கிறது? இவருக்கு பொதுவெளியில எப்படி பேசணும்னு கூட தெரியல என்று மிஷ்கினை வைத்து மீம்ஸ்கள், ட்ரோல்கள் வந்துகொண்டே இருந்தன.
இந்த நிலையில், இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களுக்கு கண்டெண்ட் கொடுத்துள்ளார் மிஷ்கின்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், ”வாழை படத்தினை பார்த்த பிறகு ஒரு படம் மாதிரியே இருக்காது. படத்தில் எதுவுமே இருக்காது போல இருக்கும். வாழை நமக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொட்டுக்காளி படத்தின்போது தான் பேசியது ட்ரோல் செய்யப்பட்டதற்கு பதிலளித்துள்ளார். கொட்டுக்காளி பட விழாவில் தான் பேசியதை பலரும் கிண்டல் செய்ததாகவும், இம்முறை மேடையில் தான் நாகரிகமாகவே பேசுவதாகவும், சரக்கு அடித்துவிட்டுப் பேசுவதாக சிலர் சொல்கின்றனர்... ஆனால் தான் சரக்கு அடிப்பதை நிறுத்திவிட்டதாகவும், விரைவில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த முதல் இயக்குநராக தான் மாறப் போவதாகவும் மிஷ்கின் கூறி இருந்தார். அதோடு, இம்முறை தன்னால் கண்டெண்ட் கொடுக்க முடியவில்லை என்பதற்காக மிகவும் சந்தோஷமாகவும் வருத்தமாகவும் மேடையைவிட்டு இறங்குவதாக ஃபினிஷிங் டச் கொடுத்து சென்றார்.
மிஷ்கினின் இந்த பேச்சு இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ள நிலையில், மீம் மெட்டிரியலாக மிஷ்கினை மாற்றி ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
What's Your Reaction?