Morphing Photo Issue : மார்ஃபிங் செய்வதாக மிரட்டல்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

Morphing Photo Issue : புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 5, 2024 - 19:32
Aug 6, 2024 - 15:39
 0
Morphing Photo Issue : மார்ஃபிங் செய்வதாக மிரட்டல்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
மார்ஃபிங் செய்வதாக மிரட்டல்

Morphing Photo Issue : சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது 17 வயது இளைய மகள் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.COM முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி கல்லூரி முடிந்து தனது வீட்டுக்குத் திரும்பிய சங்கரின் இளைய மகள் தனது அறைக்குள் சென்று தாழிட்டுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மாணவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், மாணவிக்கு கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் செய்து வந்ததும், மாணவியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடப் போவதாகவும் கூறி மிரட்டியதும் தெரியவந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். மிரட்டல் வந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் ஐபி எண்ணை ஆய்வு செய்தபோது காரைக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் காந்திஜி (19) என்பது தெரியவந்தது. உடனடியாகக் காரைக்குடிக்குச் சென்ற காவல்துறையினர் காந்திஜியை மடக்கிப் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். 

அதில், இவர் காரைக்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து மாணவிக்கு அனுப்பியதும் அதனைத் தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதேபோல, ஐந்து இன்ஸ்டாகிராம் ஃபேக் ஐடிகளை வைத்துக்கொண்டு பல்வேறு கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக மெசேஜ் செய்து மிரட்டல் விடுத்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2026ல் பிச்சை எடுக்கப்போற சீமான்.. ஆக்ரோசமாக சாபமிட்ட விஜயலட்சுமி

இதனையடுத்து கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் காந்திஜி, இதே போல எத்தனை பெண்களுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்? யார் யார் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow