குரங்கு அம்மை: மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் தொடக்கம்!

மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.

Aug 21, 2024 - 21:52
Aug 22, 2024 - 10:06
 0
குரங்கு அம்மை: மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையம் தொடக்கம்!
குரங்கு அம்மை பரிசோதனை மையம் தொடக்கம்

2020ஆம் ஆண்டு உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸால் பல லட்ச மக்கள் உயிரிழந்தனர். தற்போது அதே வரிசையில், எம்.பாக்ஸ் அல்லது குரங்கம்மை எனப்படும் புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த குரங்கம்மை வைரஸ்(Monkey Pox) தற்போது வரை 537 பேரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வந்த இந்த வைரஸ் தற்போது 116 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160% அளவுக்கு குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துரை அமைச்சரகம் மாநில அரசுகளுக்கு குரங்கு அம்மை குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “விமான நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்தான் வெளியே அனுமதிக்க வேண்டும் என்றும் குரங்கு நோயை அறிகுறிகள் தென்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும். பயணிகள் 21 நாட்களுக்குள் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றாலோ அல்லது குரங்கு அம்மை நோய் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கு சென்றிருந்தாலோ அந்த பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். குரங்கு அம்மை நோயின் அறிகுறியாக காய்ச்சல், கட்டி, கொப்புளம், அரிப்பு, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாதிகப்பட்டவரின் இரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பவும். இதற்காக நாடு முழுவதும் 12 ரத்த மாதிரிகள் சோதனை செய்ய ஆய்வக மையங்கள் தயார் நிலையில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் தனி சிகிட்சை பிரிவில் 20 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரானா காலங்களில் பின்பற்றிய விதிமுறைகளை பின்பன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: 14 பேரை காவு வாங்கிய வெடி விபத்து... ஆந்திராவில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களால் மக்கள் அச்சம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் பேரில் மதுரை விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய்க்கனான பரிசோதனை செய்யும் முகாம்களை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். மேலும் குரங்கு அம்மை நோய் தொற்று அறிகுறி யாருக்காவது தென்பட்டால் அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உடனடியாக அவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow