Minister P Moorthy : “விஜய் கட்சி ஆரம்பித்ததை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Minister P Moorthy Talk About Actor Vijay Party : நடிகர் விஜய் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள். அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார்.

Aug 30, 2024 - 07:24
Aug 30, 2024 - 16:46
 0
Minister P Moorthy : “விஜய் கட்சி ஆரம்பித்ததை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
நடிகர் விஜய் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி

Minister P Moorthy Talk About Actor Vijay Party : திமுக ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, “மதுரையில் வருகின்ற 9ஆம் தேதி இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 20 ஆயிரம் பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். இதற்காக வருகின்ற 8ஆம் தேதி மதுரை வரும் அவருக்கு நாம் சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும்.

கடந்த முன்று ஆண்டுகால முதல்வரின் சிறப்பான ஆட்சிக்கு மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். விரைவில் வருகின்ற 2026 பொது தேர்தல் பணிகளை தொடங்க உள்ளோம். நாம் ஜாதி, மதம் பார்க்காமல் கட்சிக்காக வாக்களிக்க வேண்டும். திருமங்கலத்தில் மக்களவை தேர்தலில் திமுகவினரே ஒரு சிலர் மாற்றி வாக்களித்ததால் தான் நமக்கு வாக்கு குறைந்துள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்க கூடாது. வரும்காலத்தில் திருமங்கலத்தில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற உழைக்க வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமது இலக்கு 200 தொகுதிகள். தற்போது நடிகர் விஜய் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள். அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூட்டணி கட்சிகள் இருந்தாலும் நமது வாக்கு வங்கியை உயர்த்த தற்போதிருந்தே பணிகளை செய்ய வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்ற வேண்டும். தமிழக திட்டங்கள் குறித்து மக்களிடம் கூற வேண்டும். முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 2026இல் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்கள் பேசட்டும், நாம் செயலில் காட்டுவோம்” என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow