Manu Bhaker : பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவுக்கு 3வது பதக்கம்?.. வெற்றிக்கு அருகில் மனு பாக்கர்

Manu Bhaker in Shooting at Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் மகளிர் 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

Aug 3, 2024 - 12:31
Aug 3, 2024 - 13:52
 0
Manu Bhaker : பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவுக்கு 3வது பதக்கம்?.. வெற்றிக்கு அருகில் மனு பாக்கர்
பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியாவின் மனு பாக்கர்

Manu Bhaker in Shooting at Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்ந்தது.

இந்நிலையில், 8ஆவது நாளான நேற்று மகளிர்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் இஷா சிங் ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச் சுற்றுக்கான போட்டியில், துல்லியமாக செயல்பட்ட மனு பாக்கர் 600க்கு 590 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் வெற்றிபெறும் பட்சத்தில் பதக்கம் வெல்வது உறுதியாகிவிடும். அவ்வாறு மனு பாக்கர் பதக்கம் வென்றால், ஒலிம்பிக் போட்டி ஒன்றில் மூன்று பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக, 1900ஆம் ஆண்டு நடைபெற்ற 200 மீட்டர் மற்றும் 300 மீட்டருக்கான தடை தாண்டும் பந்தயத்தில் நார்மன் பிரிட்சர்ட் வெள்ளிப் பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow