நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்.. இதுதான் நடந்தது
கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் : கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராமச்சந்திரன் பேசியதாவது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் முரணான பேச்சுகளால் பொறுப்பாளர்கள் 20-வது பேர் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
மேலும், சீமான் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் கொங்கு மண்டலத்தில் தங்களால் அரசியல் செய்யய முடியவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளாக களத்தில் இருக்கும் தங்களை மக்கள் அந்நியமாகவே பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாற்றத்திற்கான கட்சி என்பதாலேயே தாங்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்ததாகவும் ஆனால், அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அருந்ததியர்களை ‘வந்தேறிகள்’ என்று சீமான் கூறியது அச்சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது களத்தில் நிற்கும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அருந்ததியர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளதாகவும் அவர்களை புறக்கணிக்க முடியாது என்றும் ராமச்சந்திரன் கூறினார்.
தொடர்ந்து, இரண்டு சமூகத்தினருக்கு இடையே சீமான் பிளவு ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்றும் தெரிவித்தார். சீமான் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கையில் கடசிக்கு வந்ததாகவும், ஆனால் அதை நோக்கிய பயணம் இங்கில்லை என்றும், அதனால் தான் தாங்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
கட்சியின் கொள்கைக்கும் சீமானின் நடவடிக்கைகளுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளதாகவும், கடந்த ஓராண்டாக பிரச்சினை உள்ள நிலையில் அடுத்தக்கட்ட தலைவர்கள் பிரச்சினையை கேட்டு தீர்க்கவில்லை. என்னை சார்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் யாரை தொடர்ப்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரியவில்லை என பல புகார்களை அடுக்கடுக்காக வைத்தார்.
What's Your Reaction?