சினிமா

Anirudh Networth 2024: 2கே கிட்ஸ்களின் ராக்ஸ்டார்... அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

கோலிவுட் ரசிகர்களால் ராக்ஸ்டார் என கொண்டாடப்படும் அனிருத், இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனிருத்தின் சம்பளம், சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.

Anirudh Networth 2024: 2கே கிட்ஸ்களின் ராக்ஸ்டார்... அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?
அனிருத் சொத்து மதிப்பு

சென்னை: தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ‘ஒய் திஸ் கொலைவெறி’ என செம வைப் கொடுத்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமான அனிருத், இப்போது 2கே கிட்ஸ்களின் ராக்ஸ்டாராக வலம் வருகிறார். மெலடி, குத்து சாங் என ஆல் ஏரியாவிலும் மாஸ் காட்டினாலும், அனிருத்தின் இசை மீது ஏராளமான விமர்சனங்களும் வந்துள்ளன. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை, ஏதாவது ஒரு மொழியில் ஹிட்டாகும் பாடலை அனிருத் காப்பி அடிப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது வழக்கம்.

ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக அனிருத்தின் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என டாப் ஹீரோக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் அனிருத் இடம்பிடித்துவிட்டார். ரஜினியின் பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், இப்போது கூலி படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதேபோல், விஜய் – அனிருத், தனுஷ் – அனிருத், சிவகார்த்திகேயன் – அனிருத் போன்ற கூட்டணியும் ரசிகர்களிடம் செம ரீச் ஆகியுள்ளது.

அதேபோல், இந்தியில் ஷாருக்கான், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், விஜய் தேவரகொண்டா என பான் இந்தியா ஸ்டாராகவும் கலக்கி வருகிறார் அனிருத். தற்போது கூலி, தளபதி 69, எஸ்கே 23, விடாமுயற்சி என மேலும் பல படங்கள் அனிருத்தின் லிஸ்ட்டில் உள்ளன. இந்நிலையில், அனிருத் ஒரு படத்துக்கு 8 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்தியளவில் ஏஆர் ரஹ்மான் தான் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, பல விளம்பரங்களிலும் நடித்து வரும் அனிருத், அதன் மூலமும் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார். அதன்படி மாதம் 5 முதல் 8 கோடி ரூபாய் அனிருத்துக்கு சம்பளமாக கிடைக்கிறது. இதுதவிர உலகளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார். இதனடிப்படையில் அனிருத்தின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் சொகுசு வீடு, மியூசிக் ஸ்டூடியோ ஆகியவையும் அனிருத்துக்கு சொந்தமாக உள்ளன.

மேலும், அனிருத்திடம் ஜாக்குவார், BMW, ஆடி போன்ற கார்கள் சொந்தமாக உள்ளன. ஜெயிலர் வெற்றிக்குப் பரிசாக, அனிருத்துக்கு சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான போர்சே காரை கொடுத்திருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். தற்போது இந்த காரும் அனிருத்தின் கேரேஜில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அனிருத்தின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.