“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியா எங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகமது தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் “கட்டாளன்” திரைப்படம் ஒரு தீவிரமான திரில்லராக ஆக்ஷ்ன் அதிரடி படமாக இருக்கும் என்பதை குறிக்கின்றது. போஸ்டரில், நடு காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில் ஆண்டனி வர்கீஸ் கையில் கோடாளியுடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். “மார்கோ” படம் போலவே இந்த “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் படு மிரட்டலாக, மிக உயர்ந்த தரத்துடன் உள்ளது. கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தனது முதல் திரைப்படத்திலேயே பெரிய கவனத்தைப் பெற்ற நிறுவனம். இதன் இரண்டாவது படமும் இப்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. போஸ்டரின் டைட்டில் நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னணியில் மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பல ஆச்சரியங்களை டைட்டிலேயே வைத்திருக்கிறது படக்குழு. ஜெயிலர், லியோ, ஜவான், கூலி போன்ற படங்களின் டைட்டிலை உருவாக்கிய அடென்ட் லேப்ஸ் நிறுவனம் இந்த டைட்டிலை உருவாக்கியுள்ளது. தனது முதல் படத்தில் வித்தியாசமான களம், கதை மற்றும் மார்கெட்டிங் என முழு திறமையை நிரூபித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் தனது முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற ஆண்டனி வர்கீஸ் இணைந்து உருவாக்கும் இந்த புதிய பான் இந்தியா திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது குறிப்பிடத்தக்கது.