சினிமா

Meiyazhagan OTT Release: மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Meiyazhagan OTT Release: மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!
மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் திரைப்படம், கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேமிலி ட்ராமா ஜானரில் உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் ஆக்ஷன் ஜானர் படங்களே அதிகம் வெளியாகிவரும் நிலையில், ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கான ஃபீல்குட் மூவியாக மெய்யழகன் ரிலீஸானது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தப் படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்ப பிரச்சினை காரணமாக பல வருடங்களுக்கு முன் சொந்த ஊரில் இருந்து சென்னையில் செட்டில் ஆகிறார் அரவிந்த் சாமி. மீண்டும் ஒரு திருமணத்திற்காக சொந்த ஊர் செல்லும் அரவிந்த் சாமி அங்கு கார்த்தியை சந்திக்க, அவர்கள் இடையே நடக்கும் உரையாடல் தான் மெய்யழகன். உறவுகளின் முக்கியத்துவம், கலாச்சாரம், பண்பாடு, ஜல்லிக்கட்டு என படம் முழுக்க எமோஷனல் கன்டென்ட்கள் அதிகம் இருந்தன. இந்த காட்சிகளெல்லாம் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், ஒருசிலரோ இது கொஞ்சம் ஓவர் டோஸ் என நெகட்டிவாக விமர்சனம் செய்திருந்தனர்.

அதேபோல், மெய்யழகன் படத்தின் ரன்னிங் டைம் மீதும் ரசிகர்களுக்கு அதிருப்தி இருந்ததால், சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டன. ஆனாலும் நடிப்பில் கார்த்தியும் அரவிந்த் சாமியும் செமையாக ஸ்கோர் செய்திருந்தனர். இந்நிலையில், மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் மெய்யழகன் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மெய்யழகன் திரைப்படம் பான் இந்தியா ரசிகர்களிடமும் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஓடிடியில் Uncut வெர்ஷனாக மெய்யழகன் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது திரையரங்கில் ரன்னிங் டைம்-ஐ குறைக்க நீக்கப்பட்ட காட்சிகளும், ஓடிடியில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மெய்யழகன் ஃபேமிலி ட்ராமா ஜானர் மூவி என்பதால், திரையரங்குகளை விட ஓடிடியில் மேலும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.