'கூலி' படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்.. தெறிக்க விடும் போஸ்டர்!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sep 1, 2024 - 18:31
Sep 2, 2024 - 10:09
 0
'கூலி' படத்தில் இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார்.. தெறிக்க விடும் போஸ்டர்!
Kannada Superstar Upendra

Coolie Movie Update: 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த்  'ஜெயிலர்' படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கிய 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் அக்டோபர் 10ம் தேதி 'வேட்டையன்' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. 

இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம், கைதி என மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் கூட்டணி வைத்துள்ளதால்  'கூலி' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளன. 'கூலி' படத்தில் இவர்ளின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் தினமும் வெளியாகி வருகின்றன. 

மலையாள திரைப்படங்களான 'கும்பலாங்கி நைட்ஸ்', 'மஞ்சுமெல் பாய்ஸ்' ஆகிய படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் 'சௌபின் சாஹிர்' கூலி படத்தில் 'தயாள்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' நாகார்ஜுனா 'கூலி' படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டது. 

இதன்பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் 'பிரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நடிகர் சத்யராஜ் 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு மொட்டை தலையுடன்  சத்யராஜ் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 
சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, சத்யராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'கூலி' படத்தில் நடிக்கும் அடுத்த கதாபாத்திரத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கன்னட திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' உபேந்திரா 'கூலி' படத்தில் 'கலீசா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கொக்கியை கையில் வைத்திருக்கும் உபேந்திரா, முறைத்துப் பார்க்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் உபேந்திரா, பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் H2O, சத்யம் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow