தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். இதுவரை 64 பேரின் உயிரை குடித்ததுள்ளது கள்ளச்சாராயம். காவல்துறை உரிய கண்காணிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இத்தனை மரணங்களுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சியினர் முன்வைத்துள்ளனர்.
கடந்த 2021 ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 60,8793 லிட்டர் சாராய ஊறல்களும், 181597 லிட்டர்கள் கள்ளச்சாராயமும், 24,8991 லிட்டர் பாண்டிச்சேரி கள்ளச்சாராயமும், 314 லிட்டர் ஆந்திரபிரதேச கள்ளச்சாராயமும், 60705 லிட்டர்கள் எரிசாராயமும், 228305லிட்டர் மதுபாட்டில்களும், 21130 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் புள்ளி விவரங்கள் சொல்லி உள்ளது.
இதே போல சாராயத்தை கடத்த உதவியதாக 3 ஆயிரத்து 733 வாகனங்களும், கைது செய்யப்பட்ட நபர்களில் 149 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டு சாராயம் விற்பனை தொடர்பாக 14,0649 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,விற்பனையில் ஈடுபட்டதாக 13,9697 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஊறல் 88,9995 லிட்டர்களும், கள்ளச்சாராயம் 160034 லிட்டர்களும், பாண்டிச்சேரி சாராயம் 356570 லிட்டர்களும், ஆந்திரா சாராயம் 1415 லிட்டர்களும், எரிசாராயம் 37217 லிட்டர்களும், மதுபான பாட்டில் 302029 லிட்டர்களும், கள்ளு 30263 லிட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து 3,457 வாகனங்களும், கைது செய்யப்பட்ட நபர்களின் 162 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 151654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150970 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஊறல்கள் 959770 லிட்டர்களும், கள்ளச்சாராயம் 18,7665 லிட்டர்களும், பாண்டி சாராயம் 366475 லிட்டர்களும், ஆந்திரா சாராயம் 478 லிட்டர்களும், எரிசாராயம் 38,622 லிட்டர்களும், மதுபான பாட்டில் 293951 லிட்டர்களும், கள்ளு 41975 லிட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 3308 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை 74491 வழக்குபதிவு செய்யப்பட்டு 73680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊறல் 421047 லிட்டரும், கள்ளச்சாராயம் 44663 லிட்டரும், பாண்டிச்சேரி சாராயம் 103227 லிட்டரும், ஆந்திரா சரக்கு 204லிட்டரும், எரிசாராயம் 5475லிட்டரும், மதுபாட்டில் 152819லிட்டரும், கள்ளு 36274 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 1482 வாகனங்களும் 95 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றன.ஆண்டுதோறும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்பான வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள்ஆண்டு தோறும் அதிகரித்து வருவது என இந்த புள்ளி விவரங்கள சொல்கிறது.