இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இருந்து முதலில் தன்னை விலக்கிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் தற்போது, நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் ஜெட்டாவில் நடைபெறும் ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக, ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காத 29 வயதான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை தவறவிட்டார். புதிய ஐபிஎல் விதியின்படி, அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் ஆர்ச்சர் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
ஆரம்பத்தில் ஆர்ச்சர் மற்றும் சக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இருவருக்கும், ஐபிஎல் 2025 இல் பங்கேற்க முதலில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஆஷஸ் தொடருக்கு முன்னுரிமை அளித்தது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சர்க்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மார்க் வூட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் ஏலத்திற்கான ஆரம்ப பட்டியலில் இருந்தனர், ஆனால், இறுதிப்பட்டியலில் அவர்களின் பெயர் இல்லை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்த நிலையில், பிசிசிஐ, இங்கிலாந்து கிரிகெட் வாரியம் மற்றும் முகவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி, 2022 மெகா ஏலத்தில் ரூ.8 கோடிக்கு வாங்கியது. முதல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர், முழங்கை காயம் காரணமாக நாடு திரும்பினார். பின்னர் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 4 போட்டியில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ள பட்டியலில் 574 வீரர்கள் உள்ள நிலையில், இதில், ஆர்ச்சர் சேர்க்கப்பட உள்ளார். அவர்களில், 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள், இதில் மூன்று அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்ளனர். இந்த ஏலத்தில் 318 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெறுவார்கள். ஏலத்தில் இருக்கும் 35க்கும் மேற்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் ஆர்ச்சரும் ஒருவராக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.