Vinayakan: ஏர்போர்ட்டில் ரகளை... CISF வீரர்கள் மீது தாக்குதல்..? ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது!

ஐதராபாத் விமான நிலையத்தில் மது அருந்திவிட்டு பாதுகாப்பு ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sep 8, 2024 - 15:22
 0
Vinayakan: ஏர்போர்ட்டில் ரகளை... CISF வீரர்கள் மீது தாக்குதல்..? ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது!
நடிகர் விநாயகன் கைது

சென்னை: மலையாளத்தில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் விநாயகன். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மாட்டிபாடம் படம் வெளியான பின்னர் ரொம்பவே பிரபலமானார் விநாயகன். முன்னதாக தமிழில் திமிரு, சிலம்பாட்டம், காளை, சிறுத்தை, மரியான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் தனுஷின் மரியான் படத்தில் விநாயகனின் வில்லன் கேரக்டர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. மீண்டும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். நெல்சன் இயக்கிய இப்படத்தில் வர்மன் என்ற வில்லத்தனமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார். 

ஒருபக்கம் நடிகனாக மாஸ் காட்டும் விநாயகன், இன்னொரு பக்கம் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். ஏற்கனவே இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. இந்நிலையில், தற்போது ஐதராபாத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விநாயகன், இந்த முறை சிறை செல்வது கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. கேரளாவின் கொச்சியில் இருந்து கோவா சென்றுள்ளார் விநாயகன். இதற்காக அவர் ஐதராபாத் சென்று அங்கிருந்து இணைப்பு விமானத்தில் கோவா பயணிக்க வேண்டும். அப்போது ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்த விநாயகனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அதில், விநாயகன் மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடிகர் விநாயகனை கைது செய்த பாதுகாப்பு படை அதிகாரிகள், அதன் பின்னர் ஐதராபாத் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹேமா கமிட்டி வெளியானதில் இருந்து மலையாள திரையுலகமே ஸ்தம்பித்து போயுள்ளது. இப்போது பிரபல வில்லன் நடிகர் விநாயகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசியுள்ள விநாயகன், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், வேண்டும் என்றால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தெரிந்துகொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். முன்னதாக விநாயகன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதோடு, போலீஸாராலும் கைது செய்யப்பட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப தகராறு காரணமாக விநாயகனுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டு, இந்த பஞ்சாயத்து காவல்நிலையம் சென்றது. அப்போது விநாயகன் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், காவல் நிலையத்தில் புகை பிடித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. மேலும், மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் மது அருந்தியிருந்ததும் தெரியவந்தது.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்!

இதனையடுத்து இச்சம்பவத்தில் 2 பிரிவுகளின் கீழ் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த உம்மன் சாண்டி குறித்து விநாயகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், 10 பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவில் இருந்துள்ளேன். அவர்கள் அனுமதியுடனே உறவில் இருந்தேன் என தெரிவித்ததோடு, பெண் செய்தியாளர் ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின்னர் இதற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் விநாயகன் வீடியோ வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow