IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்... வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளனர்.

Nov 22, 2024 - 07:05
 0
IPL 2025: ஐபிஎல் மெகா ஏலம்... வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியல்..
ஐபிஎல் மெகா ஏலம்

உலக கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளனர். ஆனால், இந்திய வீரர்களில் உள்ள முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற பெரிய வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். 

சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வரும் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டினர் என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் நிர்வாக கமிட்டி மொத்தம் 574 வீரர்களை தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்களில் மாற்றம் இருக்கும். கடந்த சீசனில் ஒரு அணியில் வீரர் அடுத்த சீசனில் அந்த அணிக்கு எதிராக விளையாடுவார். மெகா ஏலத்தின் போது நடைபெறும் சில மாற்றங்களினால், வீரர்கள் எதிரணியில் விளையாடுவர். ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு இவை சோகத்தை ஏற்படுத்தினாலும், வீரர்களின் விளையாட்டு திறமை இதனி மறக்க செய்யும். ஏலத்தின் போது, இந்த வீரரை எடுத்தால் நன்றாக இருக்கும், இவர் வேண்டாம் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறுவதை கேட்க முடியும். அதே போல் இந்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில், எந்த வீரர் அதிக விலைக்கு போகப்போகிறார். எந்தெந்த வீரர்கள் அவர்களின் சொந்த அணிக்கு திரும்ப போகின்றனர் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இந்த சீசனுடன் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி ஓய்வு பெற்றால், அணியில் விக்கெட் கீப்பர் இல்லாத நிலை உள்ளது. அதனால், டெவோன் கான்வே மறுபடியும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வின் ரவிச்சந்திரன், ஃபாஃப் டு பிளெசிஸ் போன்ற முன்னாள் வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் எப்போதும் ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை சிஎஸ்கே தங்களுடைய பழைய வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், இந்த ஐபிஎல் மெகா ஏலம் சென்னை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதிச பதிரனா, ஷிவம் துபே, மகேந்திரசிங் தோனி.

வெளியிடப்பட்ட வீரர்கள்:

டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி, ஷேக் ரஷீத், அவனிஷ் ராவ் சின்தே, துஷ்ஹர் சின்தே, ஆரவெல்லி,  பிரசாந்த் சோலங்கி, சமீர் ரிஸ்வி, சிமர்ஜீத் சிங், ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் க்ளீசன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC)

ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்த பின் அவர், மீண்டு வரும்வரை அவருக்காக காத்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம். ஆனால், எந்த காரணத்தினால் அவரை அணியில் தக்கவைக்கவில்லை என்று தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரிஷப் பண்ட் ,"என்னை தக்கவைக்காதது, பணம் சார்ந்த பிரச்னையால்  அல்ல என்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்..." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் டெல்லி அணிக்கு அவர் திரும்ப மாட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

அக்சர் படேல்,குல்தீப் யாதவ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்.

வெளியிடப்பட்ட வீரர்கள்: 

ரிஷப் பந்த், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், இஷாந்த் சர்மா, விக்கி ஓஸ்ட்வால், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, பிரித்வி ஷா, லலித் யாதவ், குல்பாடின் நைப், யாஷ் துல், குமார் குஷாக்ரா, ஷாய் ஹோப், பிரவின் துபே, ரசிக் தார், ஜே ரிச்சர்ட்சன், சுமித் குமார், ஸ்வஸ்திக் சிகாரா, லிசாட் வில்லியம்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் (GT)

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை கைப்பற்றிய குஜராத் அணி . தொடர்ந்து அடுத்த வருடம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்படியான சூழலில் குஜராத் அணியை விட்டு வெளியேறினார் ஹர்திக். தொடர்ந்து, சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ரஜித் கான், சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ராகுல் திவேட்டியா, ஷாருக்கான் 

வெளியிடப்பட்ட வீரர்கள்: 

கேன் வில்லியம்சன், முகமது ஷமி, மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், அபினவ் மனோகர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், குர்னூர் ப்ரார், டேவிட் மில்லர், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், நூர் அகமது, ஜோ ஸிஹு லிஷோர். மோஹித் சர்மா,கார்த்திக் தியாகி, மானவ் சுதர், ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர், பிஆர் ஷரத், ராபின் மின்ஸ், சுஷாந்த் மிஸ்ரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR):

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது, ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாத்தை ஏற்படுத்தியது. தற்போது கொல்கத்தா அணிக்கு கேப்டன் தேவைப்படுவதால் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜாஸ் பட்லர் போன்ற அனுபவமிக்க வீரர்களின் பக்கம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங்

வெளியிடப்பட்ட வீரர்கள்: 

ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், சுயாஷ் சர்மா, பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், கஸ் அட்கின்சன், ஜேசன் ராய், முஜீப் உர் ரஹ்மான், கே.எஸ்.பாரத், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், வைபவ் அரோரா, சேத்தன் சகாரியா, அன்வன்ஷிக்ரிஷ்காரியா, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, அல்லா கசன்பர், துஷ்மந்த சமீரா, சாகிப் ஹுசைன்

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் (LSG):

நிகோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மோக்‌ஷின் கான், ஆயுஸ் படோனி.

லக்னோ அணி நிர்வாகத்திற்கும், கேப்டனாக இருந்த கே.எல். ராகுலுக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், அவர் அணியில் தொடர வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், லக்னோ அணியின் குருணால் பாண்டியா, தேவ்தத் படிக்கல், ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. 

வெளியிடப்பட்ட வீரர்கள்: 

கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், குயின்டன் டி காக், டேவிட் வில்லி, நவீன்-உல்-ஹக், குருனால் பாண்டியா, எம்.சித்தார்த், அமித் மிஸ்ரா, மார்க் வூட், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, சிவம் மாவி, மார்கஸ் ஸ்டோனிஸ், யுத்வீர் சிங் , ஷமர் ஜோசப், கே கௌதம், அர்ஷின் குல்கர்னி, பிரேரக் மங்காட், யாஷ் தாக்கூர், ஆஷ்டன் டர்னர், மாட் ஹென்றி, முகமது அர்ஷத் கான்

மும்பை இந்தியன்ஸ் (MI):

ஜஸ்பரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா 

மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை அணியில் அவர் தக்கவைக்கப்பட்டது ரசிர்களுக்கு பேரதிர்ச்சியாக மாறியது.  இரண்டு அணிகளாக வீரர்கள் பிரிந்து உள்ளனர் என்ற செய்திகள் உலா வந்த அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது. மும்பை அணியை பொறுத்தவரை, இஷான் கிஷன், அர்ஜுன் டெண்டுல்கர், டிம் டேவிட் ஆகியோரை மீண்டும் ஏலத்தில் எடுக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெளியிடப்பட்ட வீரர்கள்:

இஷான் கிஷன், ஷம்ஸ் முலானி, ஜெரால்ட் கோட்ஸி, டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ், பியூஷ் சாவ்லா, முகமது நபி, ஆகாஷ் மத்வால், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, ஹார்விக் தேசாய், லூக் வூட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயஸ் கோ, ஷ்ரேயாஸ். நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், ஷிவாலிக் ஷர்மா, குவேனா மபாகா

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

பஞ்சாப் அணியை பொறுத்தவரை இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. பஞ்சாப் அணியில் சாம் கரண், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஆகிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த அணியை பொறுத்தவரையில் பணமும் அதிகம் உள்ளதால், இந்திய அணியில் பலம் வாய்ந்த வீரர்களை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ஷாஷங் சிங், பிரப்சிம்ரன் சிங் 

வெளியிடப்பட்ட வீரர்கள்:

அர்ஷ்தீப் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், மேத்யூ ஷார்ட், ஜிதேஷ் ஷர்மா, அதர்வா டைடே, நாதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், கிறிஸ் வோக்ஸ், சிக்கந்தர் ராசா, சிவம் சிங், ரிஷி தவான், சாம் கரண், ககிசோ ரபாடா, வித்வத் கவேரப்பா, அசுதோஷ் சர்மா, விஸ்வநாத் பிரதாப் சிங், தனாய் தியாகராஜன், பிரின்ஸ் சவுத்ரி, ஹர்ஷல் படேல், ரிலீ ரோசோவ், ஹர்பிரீத் பாட்டியா

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR):

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நன்றாக விளையாடி நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணி மீண்டும் பழைய வீரர்களை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரியான் பராக், துரூவ் ஜோரல், ஷின்ரோன் ஹெட்மையர், சந்தீப் சர்மா 

வெளியிடப்பட்ட வீரர்கள்:

ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், ரோவ்மன் பவல், ஷுபம் துபே, யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, டிரென்ட் போல்ட், குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, டொனோவன் ஃபெரீரா, அவேஷ் கான், டாம் கோஹ்லர்-காட்மோர், அபித்ரே முஷ்டாக், பர்கர், தனுஷ் கோட்டியான்,கேசவ் மகாராஜ், பிரசித் கிருஷ்ணா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB)

ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் அணியில் தக்கவைக்காதது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஒவ்வொரு முறை ஏலத்திலும், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி வரும் வீரர்களை எடுக்க ஆர்வம் காட்டும். கே.எல். ராகுலை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

விராட் கோலி, ராஜத் படிதர் , யாஷ் தயாள் 

வெளியிடப்பட்ட வீரர்கள்:

முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப், கர்ண் ஷர்மா, கிளென் மேக்ஸ்வெல், ஹிமான்ஷு ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், மஹிபால் லோம்ரோர், சவுரவ் குமார், ரீஸ் குமார், ரீஸ் , வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், டாம் குரான், லாக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி வந்தனர். ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ், கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில், சன்ரைசர்ஸ் நிர்வாகம் இன்னும் பலமிக்க வீரர்களை ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

ஹென்ட்ரி கிளாசின், பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி

வெளியிடப்பட்ட வீரர்கள்:

புவனேஷ்வர் குமார், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், சன்வீர் சிங், விஜயகாந்த் வியாஸ்காந்த், மயங்க் அகர்வால், டி நடராஜன், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், கிளென் பிலிப்ஸ், அன்மோல்பிரீத் சிங், மயங்க் மார்கண்டே, வனிந்து ஹசரங்கா, உபேந்திர சிங் யாடங்கா, , உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஷாபாஸ் அகமது, ஜெய்தேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow