கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை.. சர்வதேச அளவில் தொழில்.. 4வது நாளாக சோதனை
பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்கிழமை காலையிலிருந்து திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்த ஆரம்பித்தனர்.
குறிப்பாக பாலிஹோஸ் எனப்படும் கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் பைப் உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தெரிவித்தனர். இந்த நிறுவனம் 28 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனமாகும்.
பாலிஹோஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள பிரிவுகளிலும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் Polyfit Fabricators Pvt. Ltd நிறுவனத்திலும், பூந்தமல்லியை அடுத்த வேலப்பன் சாவடியில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் (எம்ஆர் கன்ஸ்டக்சரன்) வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.
இதே போன்ற கோயம்பேட்டில் உள்ள மால் ஒன்றில் தனியார் நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கிண்டி பாலி ஹவுஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஆண்டுகளில் செய்த வருமான வரி கணக்கு தாக்கல் அந்நிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமிழக அரசுடன் இரண்டு தனியார் நிறுவனங்கள் 200 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
நரம்பு மண்டலம், இதயத்தில் பயன்படுத்தக் கூடிய அதிநுட்பக் குழாய்களை பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்கும். டயாலிசிஸ் சிகிச்சைக்கான குழாய்களையும் பாலிஹோஸ் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த நிறுவனமான பாலிஹோஸ் என்ற நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய இந்த வருமான வரித்துறை சோதனை இன்று 4வது தொடர்கிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துடன் மின் உற்பத்தி செய்து கொடுக்கும் தனியார் நிறுவனமான ஓபிஜி குடும்ப நிறுவனத்தில் மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள மற்றொரு நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?