Minister Sivasankar : நான் தான் அமைச்சர்; அன்புமணி ராமதாஸுக்கு எப்படி தெரியும்? : சிவசங்கர் கேள்வி

Transport Minister Sivasankar on Anbumani Ramadoss : போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கிறேன்; ஆனால் பேருந்து கட்டண உயர்வு அன்புமணி ராமதாஸருக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Aug 15, 2024 - 14:45
Aug 16, 2024 - 09:54
 0
Minister Sivasankar : நான் தான் அமைச்சர்; அன்புமணி ராமதாஸுக்கு எப்படி தெரியும்? : சிவசங்கர் கேள்வி
Transport Minister Sivasankar on Anbumani Ramadoss

Transport Minister Sivasankar on Anbumani Ramadoss : தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தப்போவது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் களையாமல் பேருந்து கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கிறேன்; ஆனால் பேருந்து கட்டண உயர்வு அன்புமணி ராமதாஸருக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்(Minister Sivasankar) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை படித்தீர்களா.. : பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு உணவு அருந்தினார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்(Minister Sivasankar), “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையப்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மக்களிடம் சமமாக அமர்ந்து உணவருந்த சமபந்தி உணவு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் இன்று ஒரு மகத்தான திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரியளவு கூட்டம் இருந்தது. ஆனால், யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளுடைய புகார்கள் கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது, எந்த ஆம்னி பேருந்துகள் என்று என்னுடன் தெரிவித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்”.

“நாம் ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் பேருந்து வாங்குகிறோம், நம் ஊருக்கு ஏற்றது போல் சில மாற்றங்கள் செய்து பேருந்துகள் வரவுள்ளது. தற்பொழுதும் பொதுமக்களிடம் இருந்து புதிய கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. அதையும் நாங்கள் தயாரிப்பு  நிறுவனத்திடம் கூறியுள்ளோம்.

மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

தாழ்தள பேருந்து என்பது மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நீதிமன்றம் வழங்கிய அறிவுரைப்படி வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறுகிய சாலைகளில் பேருந்துகளை இயக்க முடியாத இடங்களில் மினி பேருந்துகளை இயக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது. எங்கு தேவை இருக்கிறதோ, அதை ஆய்வு செய்து  அதற்கான வரவரிக்கைகள் தயாராக உள்ளது. மக்கள் நலனுக்காகவும் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்”.

“போக்குவரத்துத் துறை அமைச்சர் நான் இருக்கிறேன். எங்களை வழி நடத்துபவர் முதலமைச்சர். எங்களுக்கு தெரியாமல் இது அன்புமணிக்கு(Anbumani Ramadoss) மட்டும் எப்படி தெரிந்தது என்பதுதான் நீங்கள் சொல்ல வேண்டும். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி கிடையாது.

போக்குவரத்து துறை மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறது கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தொழிலாளர்களே கூறி வருகிறார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்களும் இந்த கருத்தை தெரிவித்து வருகிறார்கள். நம் மக்கள் மீது அந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக அந்த எண்ணத்தில் தான் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow