Foods Avoid with Lemon Juice : எலுமிச்சை ஜூஸ் பிடிக்குமா? இது தெரியலைனா ஆபத்து உங்களுக்குத்தான்!

Foods To Avoid with Lemon Juice : எந்தெந்த உணவுகளோடு எலுமிச்சை சாற்றை பயன்படுத்தக்கூடாது என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் குறித்தும் கீழே பார்க்கலாம்.

Aug 6, 2024 - 17:06
Aug 6, 2024 - 18:32
 0
Foods Avoid with Lemon Juice : எலுமிச்சை ஜூஸ் பிடிக்குமா? இது தெரியலைனா ஆபத்து உங்களுக்குத்தான்!
எலுமிச்சை ஜூஸ் பிடிக்குமா?

Foods To Avoid with Lemon Juice : இயற்கையாகவே அரோக்கியத்தைக் கொட்டித் தரும் பழங்களில் எலுமிச்சை பழமும் ஒன்று. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து மிகுந்த எலுமிச்சை பழம் இதய ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இதுமட்டுமில்லாமல் உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்க எலுமிச்சை பழங்களின் பங்கு அளவற்றது. இதில் உள்ள வைட்டமின் சி, antioxident ஆக செயல்படுகிறது. இது உடலில் புதிய செல்கள் உருவாக உதவுகிறது. மேலும் உடலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும் இந்த பழங்கள் உதவுகின்றன.  

இப்படி எண்ணெற்ற பலன்களைக் கொண்டுள்ள எலுமிச்சை பழங்கங்களில் சில தீமைகளும் இருக்கின்றன. அதிக புளிப்பு சுவை கொண்ட எலுமிச்சை சில உணவுகளுடன் சேரும்போது அது நமக்கு தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எந்தெந்த உணவுகளுடன் எலுமிச்சை சேர்ந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தீமை உண்டாகும் என்பது குறித்து தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். 

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்:

எலுமிச்சை பழங்களில் உள்ள சிட்ரிக் ஆசிட், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுடன் சேரும்போது அதன் இயற்கையான தன்மையே மாறுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது, வயிற்றில் ஏற்கனவே உள்ள அமிலங்களின் தன்மை மாறி உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இனிப்பு சுவை மிக்க பழங்கள்: 

வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடவே கூடாது. இதனால் உடலில் வீக்கம், தடிப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம் எனக் கூறப்படுகின்றன. 

ரெட் வைன்: 

ரெட் வைனில் எலுமிச்சை சாறு சேர்க்கும்போது, ரெட் வைனுக்கென இருக்கும் அந்த தனித்துவமான சுவை கெட்டுப்போகும். மேலும் இது உங்களுக்கு செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். 

வினிகர்: 

எலுமிச்சை மற்றும் வினிகர் இரண்டுமே அதிகளவு புளிப்பு சுவை கொண்டது. இவை இரண்டையும் ஒன்று சேர்க்கும்போது உணவுகளில் புளிப்பு சுவை கூடிவிடும். நீங்கள் சமைக்கக்கூடிய உணவைப் பொருத்து இவை இரண்டையும் பயன்படுத்துவது நல்லது. 

முட்டை: 

எலுமிச்சை சாற்றை முட்டையுடன் சேர்க்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், முட்டையில் உள்ள ப்ரோட்டீன் சத்துகளை அழிக்கும் தன்மையுடையது. எனவே சரியான அளவுகளில் இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்வது அவசியம். 

மேலும் படிக்க: அழகிப்போட்டிகளில் போட்டிப்போட்டு வெல்லும் அம்மா - மகள்!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். மைக்ரேன் தலைவலி உடையவர்கள் அதிகளவில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கக்கூடாது. அதே போல அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை அல்சர் பிரச்சனையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல் சொத்தை உடையவர்கள், நெஞ்செரிச்சல் உடையவர்களும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை குறைத்துக்கொள்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow