வேலைக்காக போலி சான்றிதழ்.. பல்கலைக்கழத்தில் சிக்கிய இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்..
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்த இளைஞர், தாமாக முன்வந்து சிக்கிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த கிருபாநிதி (34) என்ற இளைஞர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரின் படித்ததாக போலி சான்றிதழை தயார் செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதிக சம்பளத்தில் வேலைக்கு சேர்வதற்காக போலி சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில், நேற்று இங்கு இளைஞர் ஒருவர் வந்து 2013- 2016 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்ததாகவும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு இடம் பெயர்வு சான்றிதழ் ((Migration Certificate)) தேவை என்றும் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், அந்த இளைஞரின் சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்த போது அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. போலி சான்றிதழை பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் சக்திவேல், இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை கைது செய்து போலி சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர். கைதான இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த கிருபாநிதி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
போலி சான்றிதழ்களை ரூ. 80 ஆயிரம் கொடுத்து வாங்கியதாகவும், சான்றிதழ் தயார் செய்து கொடுத்த மோசடி நபரை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் கிருபாநிதி வாக்குமூலம் அளித்துள்ளார். பணம் கொடுத்தால் விரைவு தபால் மூலம் வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கிருபாநிதி கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பே படிக்காதது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதிகமான சம்பளத்தில் வேலைக்கு செல்வதற்காக போலி சான்றிதழ்களை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்த நபர் யார்? அவர் இதுபோன்று யாருக்கெல்லாம் போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்துள்ளார் என்பது குறித்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி சான்றிதழ் தயார் செய்தது மட்டுமில்லாமல், அதனை நேரடியாக அண்ணா பலகலை கழகத்திற்கு கொண்டு சென்று இடம் பெயர்வு சான்றிதழ் கேட்ட கிருபாநிதியை போன்று, சட்டத்திற்கு புறம்பாக போலி சான்றிதழ்கள் தயார் செய்யும் நபர்கள் குறித்து கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?