மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது இவர்கள் தானா..? பரபரப்பு கருத்துக் கணிப்பு
மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் மோதின.
மும்பையின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் சிவசேனா (உத்தவ்) கட்சி சார்பாகவும், சிவசேனா (ஷிண்டே) தரப்பில் மிலிந்த் தியோராவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) சார்பில் சந்தீப் தேஷ்பாண்டேவும் போட்டியிட்டனர்.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் கட்சிரோலி மாவட்டத்தில் 73.7 சதவீத வாக்குகளும், கோலாப்பூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிக பட்சமாக 76.3 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. மாநிலம் முழுவதும் சராசரியாக 65.1 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், மகராஷ்டிராவில் யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பது தொடர்பான காரசாரமான கருத்துகணிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்வேறு செய்தி நிறுவனங்கள் தங்களது கருத்துகணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், Matrize கருத்துக்கணிப்பு படி, மகராஷ்டிராவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 150-170 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 110-130 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பில்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், மகாயுதி கூட்டணிக்கு 175-195 இடங்களும், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு 85-112 இடங்களும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு தனியார் செய்திச் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பு படி, மகாயுதி கூட்டணி 122-186 இடங்களிலும், மகா விகாஸ் அகாடி கூட்டணி 69-121 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் மகராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறினாலும், பலர் இது பாஜக-வின் சதியாகவே கருதுகின்றனர். மகராஷ்டிராவில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?