தமிழ்நாடு

'தலைவா' தயாரிப்பாளர் கடையில் திருடிய ஊழியர்.. பெங்களூவில் கைது செய்த போலீஸ்

நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் தயாரிப்பாளரின் நகைக் கடையில் திருடிவிட்டு தப்பிய ஊழியரை பெங்களூருவில் வைத்து காவல்துறை கைது செய்தது.

'தலைவா' தயாரிப்பாளர் கடையில் திருடிய ஊழியர்.. பெங்களூவில் கைது செய்த போலீஸ்
தயாரிப்பாளரின் நகைக் கடையில் திருடிவிட்டு தப்பிய ஊழியர் கைது

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் தலைவா. இந்த படத்தை தயாரித்தது ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சந்திரபிரகாஷ் ஜெயின். இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றிற்கு ஃபைனான்சியராக உள்ளார். இவரது மகன் தினேஷ்.

இவர் சென்னை ஆழ்வார்பேட்டை சிபி ராமசாமி சாலையில் வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெங்களூருவைச் சேர்ந்த பாபுலால் என்பவர் வேலை செய்து வந்தார். தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள தினேஷின் அதே அலுவலகத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி ரூ.5 லட்சம், 20 கிலோ வெள்ளி நகைகள், பைக் ஒன்றையும் திருடிக் கொண்டு பாபுலால் ஓடி விட்டதாக தினேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

பாபுலால் வேலைக்கு சேர்ந்து ஒருவருடம் தான் ஆகிறது. அவரது செல்போன் சுவிட்ச் ஆகி இருந்ததால் அவரது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதோடு, தப்பி ஓடிய பாபுலாலை போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில் பாபுலால் பெங்களூரு பகுதியில் உள்ள லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். பிறகு லாட்ஜில் பதுங்கி இருந்த பாபுலாலை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 20 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான பாபுலாலை சென்னை கொண்டு வந்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.