பவர் பாண்டி, ராயனைத் தொடர்ந்து, தனுஷ் மூனாவதா நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்த டைரக்ட் பண்ணார். இந்தப் படத்துல தன்னோட அக்கா மகன் பவிஷ்-அ ஹீரோவா இன்ட்ரோ பண்ண தனுஷ், கூடவே மேத்யூ தாமஸ், அனிகா, ரம்யா ரங்கநாதன்-னு இளமை கூட்டணியோட களம் இறங்கினாரு. வழக்கமான காதல் கதை தான், அதனால ஜாலியா வாங்க... ஜாலியா போங்கன்னு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கு ப்ரோமோட் பண்ண தனுஷ், சொன்ன மாதிரியே படம் முழுக்க செம வைப் கொடுத்துருக்காராம்.
மிடில் கிளாஸ் பையனுக்கும், செம Rich ஆன பொண்ணுக்கும் நடக்குற காதல் கதை தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்-ன்னு விமர்சனங்கள் வெளியாகிருக்கு. படம் முழுக்க செம கலர்ஃபுல்லா இருக்குறதால, ஜாலியா போர் அடிக்காம இருக்குதுன்னும் ரசிகர்கள் தம்ஸ்-அப் காட்டிருக்காங்க. ரத்தம், வன்முறை, ஆபாசம் இல்லாத ஃபேண்டஸி மூவியா நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வந்துருக்குன்னும், டைரக்டரா தனுஷுக்கு இது ஹாட்ரிக் ஹிட்ன்னும் கோலிவுட்ல இருந்து டாக்ஸ் வருது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைச்சாலும், பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணில ரிலீஸான டிராகன் படத்த, முரட்டு சம்பவம்ன்னு ரசிகர்கள் கொண்டாடிட்டு வர்றாங்க. ரவி மோகன் நடித்த கோமாளி, தானே இயக்கி நடித்த லவ் டுடே-ன்னு அடுத்தடுத்து ரெண்டு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், இந்தமுறை அஸ்வத் மாரிமுத்து கூட்டணில இணைஞ்சார். அஸ்வத் மாரிமுத்துவும் ஏற்கனவே ‘ஓ மை கடவுளே’ படம் மூலமா கவனம் ஈர்த்திருந்தார்.
இந்த கூட்டணில அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கெளதம் மேனன், ஜார்ஜ் மரியான் பலரும் நடிக்க, டிராகன் படத்தோட எதிர்பார்ப்பு தாறுமாறா எகிறிபோய் இருந்துச்சு. அதேமாதிரி டிராகன் ட்ரெய்லரும் படத்துக்கு செம ஹைப் கொடுத்திருந்துச்சு. நிறைய படங்கள்ல ட்ரைலர் நல்லா இருக்கும், ஆனா படம் மொக்கையா இருக்கும். டிராகன் படத்த பொறுத்த வர, ட்ரைலர விட படத்துல இன்னும் தரமா இறங்கி சம்பவம் பண்ணிருக்காங்கன்னு விமர்சனங்கள் கிடைச்சிருக்கு. முக்கியமா இன்ட்ரவல் சீன், செகண்ட் ஹால்ஃப் போர்ஷன்ஸ் எல்லாம் தாறுமாறுன்னும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பண்ணிருக்காங்க.
பொறுக்கியா சுத்துனா லைஃப் எப்படிலாம் தடுமாறும்ங்குறத செம ஜாலியாவும் எமோஷனலாவும் சொல்லிருக்காங்க, க்ளைமேக்ஸ்ல வர ட்வீஸ்ட் ஷாக்கிங் சர்ப்ரைஸ்ன்னும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பண்ணிருக்காங்க. மொத்தத்துல இந்த வாரம் ப்ளாக் பஸ்டர் டிராகன் தான்னு கோலிவுட் ரிப்போர்ட்ஸ் அடிச்சு சொல்லிருக்கு. தனுஷோட ஜெராக்ஸ் மாதிரியே வலம் வரும் பிரதீப் ரங்கநாதன், இப்ப தனுஷோட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துக்கே தக் லைஃப் கொடுத்துருக்கார்ன்னு தான் சொல்லணும்.