நியாயம் வேண்டி கோர்டுக்கு செல்லும் நாய்.. "கூரன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'கூரன்' திரைப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.
பொதுவாக மனிதர்கள் தான் ஏதேனும் பிரச்சினை என்றால் நியாயம் வேண்டி கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி ஏறி போராடுகிறது.
மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறோம்.
இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ ஷங்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
இப்படத்தில் தேசிய விருது பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின் மேற்பார்வையில் மாருதி படத்தொகுப்பு செய்துள்ளார், மற்றும் மாட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவில், சித்தார்த் விபின் இசையில், வனராஜின் கலை இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது, விக்கி தயாரிப்பாளராக தனது கனா ப்ரொடக்ஷன்ஸ் மூலம் வி.பி கம்ப்பைன்ஸ்டன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
'கூரன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ் சுவாரசியமாக இருப்பதாக கூறி பாராட்டியுள்ளார். இந்த கதை வித்தியாசமாக இருக்கிறது என்றும் பாராட்டினார். இத்திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
What's Your Reaction?