சென்னை: இந்தாண்டு தமிழில் வெளியாகவுள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது வெற்றிமாறனின் விடுதலை 2ம் பாகம். சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை முதல் பாகம் 2023ம் ஆண்டு ரிலீஸானது. சூரி லீட் ரோலில் நடித்த முதல் படம் என்பதோடு, வெற்றிமாறன், இளையராஜா கூட்டணியும் விடுதலையில் தான் முதன்முறையாக இணைந்தது. விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரிலும், சூரி குமரசேன் என்ற போலீஸ் ரோலிலும் நடித்திருந்தார். இவர்களுடன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, சேத்தன், இயக்குநர்கள் ராஜீவ் மேனன், கெளதம் மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
விடுதலை ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் மொத்தமாகவே முடித்திருந்தார் வெற்றிமாறன். இதனால் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி, 2023 மார்ச் 321ம் தேதி விடுதலை முதல் பாகம் ரிலீஸானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தாலும், பெருமாள் வாத்தியாரின் உண்மையான பயோபிக்காக இது இல்லை என சில விமர்சனங்களும் எழுந்தன.
இதனால் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார் வெற்றிமாறன். இதனால் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், முதல் பாகத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விடுதலை 2ம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதோடு விடுதலை 2-வில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதனால் விடுதலை 2ம் பாகத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், விடுதலை 2ம் பாகத்தில் இருந்து தெறிமாஸ்ஸாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ”உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறளுடன், விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட், ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதால், இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு விரைவில் அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விடுதலை 2ம் பாகத்தில் இருந்து முதல் அப்டேட் வெளியாகவிருப்பது, சூர்யா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. கங்குவாவை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது. அதேநேரம் விடுதலை 2ம் பாகமும் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டால், அடுத்து வாடிவாசல் படத்தை தொடங்கிவிடுவார் வெற்றிமாறன். சூர்யாவும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறனின் க்ரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறாராம்.
Most anticipated update is here!
— RS Infotainment (@rsinfotainment) July 16, 2024
Director #VetriMaaran 's #ViduthalaiPart2 First Look launch tomorrow @ 11:30 AM. StayTuned
An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72 #Kishore @menongautham… pic.twitter.com/yuSgR1rezJ