Thug Life: சினிமாவில் 65 ஆண்டுகள்... கமல்ஹாசனுக்கு ராயல் சல்யூட் செய்த தக் லைஃப் படக்குழு!
களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், திரையுலகில் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து மணிரத்னத்தின் தக் லைஃப் படக்குழு கமலுக்கு ராயல் சல்யூட் கொடுத்துள்ளது.
சென்னை: உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் ரிலீஸான இந்தியன் 2 படுதோல்வி அடைந்தது. கமலுடன் ஷங்கர், அனிருத் என பிரம்மாண்ட கூட்டணியில் உருவான இந்தியன் 2ம் பாகத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கதை, திரைக்கதை, மேக்கிங், பின்னணி இசை என, எல்லா வகையிலும் சொதப்பிய இந்தியன் 2 படத்தை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்திருந்தனர். திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த வாரம் ஓடிடியில் வெளியாகி, அங்கேயும் மரண அடி வாங்கி வருகிறது இந்தியன் 2.
இதனிடையே பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி படத்தில், வில்லனாக மிரட்டியிருந்தார் கமல். அதிலும் கமல்ஹாசனுக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே இருந்தன. கல்கி இரண்டாம் பாகத்தில் தான் கமல் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்தியன் 2 படத்தின் நெகட்டிவான விமர்சனங்களை கண்டுகொள்ளாத கமல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தக் லைஃப் படத்தில் வெறித்தனமாக நடித்து வருகிறார். நாயகனுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், கமல் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் நிறைவு செய்ததை தக் லைஃப் படக்குழு கொண்டாடி வருகிறது. அதன்படி, தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட் சென்ற கமல்ஹாசனை, வரிசையாக நின்றபடி கை தட்டி வரவேற்ற படக்குழுவினர், அவருக்கு ராயலாக சல்யூட் செய்தனர். மேலும் களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை என்ற கமலின் ஸ்பெஷல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதன்பின்னர் தக் லைஃப் படக்குழுவினர் அனைவரும் கமலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் படிக்க - கொட்டுக்காளி படத்துக்காக நிர்வாணமா டான்ஸ் ஆட ரெடி..” -மிஷ்கின்
கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வரும் தக் லைஃப் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுக்கு மகனாக சிம்புவும், அவரது ஜோடியாக த்ரிஷாவும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், கமல் 3 கெட்டப்புகளில் நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு அன்பறிவ் பிரதர்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். இந்தப் படமும் ஆக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் ஹெச் வினோத் இயக்கவிருந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் கமல்ஹாசன்.
பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவிருந்த இப்படத்தின் கதையில் தான், விஜய் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் 69வது படமாக இது உருவாகவுள்ளதாகவும், இதுபற்றி சீக்கிரமே அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?