”எங்க அப்பா பாக்கெட்டுல 5 ரூபா கூட இருக்காது..” விஜய் சேதுபதி மகனுக்கு குட்டு வைத்த சேரன்!

விஜய் சேதுபதி மகன் சூர்யா, பாக்கெட் மணி குறித்து பேசிய வீடியோ வைரலாகி வந்தது. இதுகுறித்து இயக்குநர் சேரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Oct 23, 2024 - 19:08
 0
”எங்க அப்பா பாக்கெட்டுல 5 ரூபா கூட இருக்காது..” விஜய் சேதுபதி மகனுக்கு குட்டு வைத்த சேரன்!
விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு குட்டு வைத்து சேரன்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஹீரோ, வில்லன், கேமியோ என வித்தியசமான கேரக்டர்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து இவ்வளவு பெரிய ஹீரோவாக வருவதற்காக விஜய் சேதுபதி பல ஆண்டுகள் சினிமாவிலேயே பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் சூர்யா சேதுபதி, நானும் ரவுடி தான், சிந்துபாத் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்போது பீனிக்ஸ் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரியாகவுள்ளார் சூர்யா சேதுபதி.

விஜய் சேதுபதியின் படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றிருந்தபோது தான் சூர்யாவுக்கு பீனிக்ஸ் படத்தின் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பாவின் உதவி இல்லாமல் நான் ஹீரோவாகிவிட்டதாக உதார் விட்டுக்கொண்டிருந்தார் சூர்யா. இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று பாக்கெட் மணி குறித்து பேசி பங்கமாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் சூர்யா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த அவர், "நான் சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்; என் அப்பா செலவுக்கு தினமும் வெறும் 500 ரூபாய் தான் குடுப்பாரு, அதனால தான் சினிமால ஜெயிக்கணும்னு வந்துருக்கேன்!" என பேசி 90ஸ் கிட்ஸ்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டினார்.

“எங்களுக்கெல்லாம் பாக்கெட் மணின்னா என்னதுன்னே தெரியாது, இவருக்கு 500 ரூவா பத்தாதா, இதுவே கஷ்டம்ன்னு சொல்லி கிரிஞ்ச் பண்றார்ன்னு” நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வந்தனர். விஜய் சேதுபதி கஷ்டப்பட்டு சினிமாவில் ஒரு இடத்துக்கு வந்திருக்கார், அத அவரோட மகன் சூர்யாவே சல்லி சல்லியா நொறுக்கிடுவார்ன்னும் கலாய்த்து வந்தனர். சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கன்டென்ட் கொடுக்காமல், ஒழுங்கா நடிச்சோமா போனோமான்னு இருக்கணும் எனவும் வச்சு செய்து வந்தனர். 

இந்நிலையில் விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு இயக்குநர் சேரன் குட்டு வைத்துள்ளார். இந்த 500 ரூபாய் பாக்கெட் மணி குறித்து சூர்யா சேதுபதி பேசியதை சுட்டிக் காட்டியுள்ள அவர், “எங்க அப்பா பாக்கெட்டில ஒருநாளைக்கு 5 ரூபாய் பாக்குறதே அரிது... அப்பறம் எங்க என் பாக்கெட்டில..” என தக் லைஃப் கொடுத்துள்ளார். பொற்காலம், ஆட்டோகிராஃப், பொக்கிஷம்ன்னு பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் சேரன். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் அதுபற்றி இதுவரை சரியான தகவல்கள் இல்லை.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பாக்கெட் மணி குறித்து பேசியதை, ட்விட்டர் பக்கத்திலேயே பொளந்து கட்டியுள்ளார். சேரனின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் திரைப்படம், நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow