This Week OTT Release : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்!

This Week OTT Release Movies List : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி உள்ளிட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதன் முழு லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

Sep 26, 2024 - 19:22
Sep 26, 2024 - 19:42
 0
This Week OTT Release : டிமான்டி காலனி 2, கொட்டுக்காளி... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்!
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

This Week OTT Release Movies List : தமிழில் இந்த வாரம் டிமான்டி காலனி 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த டிமான்டி காலனி 2, கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. தங்கலானுக்குப் போட்டியாக வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், டிமான்டி காலனி 2 இந்த வாரம் முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2, திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சூரியின் கொட்டுக்காளி திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த இந்தப் படத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பக்கா ஆர்ட் ஃபிலிம் என பிரபலங்களால் கொண்டாடப்பட்ட கொட்டுக்காளி, இந்த வாரம் முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ரஷ்யா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ள இந்தப் படம், உலக சினிமா ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும். இந்த வரிசையில் தமிழில் காஃபி திரைப்படமும் இந்த வாரம் ஆஹா தளத்தில் வெளியாகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த சரிபோதா சனிவாரம் திரைப்படமும் இந்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, எஸ்ஜே சூர்யா, ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், கடந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நானி, எஸ்ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் பக்கா கமர்சியல் மூவியாக வெளியான சரிபோதா சனிவாரம், டோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

தெலுங்கில் மேலும் பிரதிநிதி 2 திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. பிரபுத்வா ஜூனியர் கலாஷாலா (Prabuthwa Junior Kalashala) திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பரதநாட்டியம் (Bharathanatyam) திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அதேபோல், இந்தியில் லவ் சித்தாரா (Love Sitara) திரைப்படம் ஜீ 5 ஓடிடியிலும், தி ஹெய்ஸ்ட் (The Heist) ஜியோ சினிமாவிலும் வெளியாகிறது. மேலும், தாசா கபார் சீசன் 2 (Taaza Khabar S2) வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களுக்கு Rez Ball, Divorce, Bankong Breaking என்ற தாய்லாந்து மூவி, Nobody Wants This என்ற வெப் சீரிஸ், Will And Harper, Mr McMahon என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகியவை வெளியாகின்றன. அமேசான் ப்ரைமில் Killer Heat, Emegency Landing (Russian) ஆகிய படங்கள் வெளியாகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow