பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்.. 

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுபட்டனர்.

Nov 14, 2024 - 03:54
 0
பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்.. 
பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்.. 

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பழையபுதுரெட்டியூர் கிராமத்தைச் கோகுல கண்ணன் (27) . இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அஷ்தகிரியூர் பகுதியை சேர்ந்த சந்தியா(24) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் சந்தியா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில்,  உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவர் இருக்கிறாரா என கோகுல கண்ணன் விசாரித்துள்ளார். அப்பொழுது மருத்துவமனையில் மருத்துவர் இருப்பதாகவும், உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வாருங்கள் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது, மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மட்டுமே இருந்துள்ளன்ர். செவிலியர்கள் சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த போது, திடீரென்று  சந்தியாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால், சந்தியாவின் கணவர் மற்றும் அம்மாவிடம் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் கையெழுத்து போடுங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்தபோது குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளனர். சந்தியா மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சை வழங்க போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை எனக்கூறி, சந்தியாவை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் முறையான சிகிச்சையளிக்காமல், தாய் மற்றும் சேய் என இருவரின் உயிரிழப்பிற்கும் செவிலியர்களின் கவன குறைவு மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததே காரணம் என உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை மீதும், பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, கைது செய்ய வலியுறுத்தி, 6 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரப்பரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow