தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.

Nov 5, 2024 - 21:46
 0
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு கூறிய நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் பிகே சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  “வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஆலோசனைப்படி கடந்த மார்ச் மாதம் தங்கசாலை பகுதியில் ரூ.4224 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கும் விழா வடசென்னை அனைவரும் பாராட்டும் அளவிற்கு நேர்த்தியாக நடந்தது. எங்களை வசைபாடுபவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை. மக்கள் நலனுக்கு எவை உகந்ததோ, அதை செய்ய இந்த ஆட்சியின் மக்கள் பணி இருக்கும்.

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.தெலுங்கர்கள் குறித்து கஸ்தூரி சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, பெருமழை வந்தால் எப்படி சகதி, குப்பை அடித்து செல்லுமோ அதுபோல் உள்ளவர்கள். அதற்கு உண்டான தகுதி இல்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். மக்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 225 திட்டங்கள் 11 துறைகள் சார்பில் 5 ஆயிரம் கோடி மேலான செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

ரூ.1613 கோடியை இந்த திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றி வருகிறோம். வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் கொளத்தூர் பகுதியில் நேற்று முதல்வர் படிப்பகம் என்ற வீட்டில் படிக்க வசதி இல்லாதவர்களுக்கு போட்டி தேர்வில் பங்கேற்பவர்களுக்கு முழுமையான வசதிகளோடு குறைந்த கட்டணத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு பெரிய நூலகமும் அமைத்து ஒரு முறையே 51 பேர் அமர்ந்து படிக்கும், வசதி கொண்ட அந்த திட்டத்தை அர்ப்பணித்தார்.

ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் சென்னையில் உட்பட்ட 10 இடங்களில் 20 கோடி செலவில் படிக்கவும், பணியிட பகிர்வு மையமாக அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.வடசென்னையில் குறிப்பாக எழும்பூர், திருவிக நகர், துறைமுகம், ராயபுரம் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் திட்டத்தை விரிவுப்படுத்த உத்தரவிட்டிருந்தார். 

அந்த வகையில் சுமார் ஏழு இடங்களில் நூலகங்களை ஆய்வு செய்து அதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவும், வசதி குறைவான நூலகங்களை இடித்து புதிதாக கட்டவும் ஆய்வு செய்யப்பட்டது.அதேபோல் இந்த மாத இறுதிக்குள் நிச்சயம் ஆம்னி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும். பேருந்து நிலையத்தில் 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow