Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!

சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

Aug 9, 2024 - 00:03
Aug 9, 2024 - 01:18
 0
Breaking: சென்னை மாநகர பேருந்தில் பட்டா கத்தியுடன் மாணவர்கள் அராஜகம்... சுத்துப் போட்ட போலீஸார்!
கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: கடந்த சில தினங்களாகவே சென்னையில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களிடம் ரூட்டு தல பிரச்சினை அடிக்கடி விஸ்வரூபம் எடுப்பது வழக்கம். சென்னையில் உள்ல குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்கள் சண்டை போடுவதும், பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்து எச்சரித்துவிட்டு திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்படும் இந்த தகராறு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள் அதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தில் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லக்கூடிய தடம் எண் 101 மாநகரப் பேருந்திற்குள், கல்லூரி மாணவர்கள் சிலர் அராஜகம் செய்து வருவதாக போலீஸாருக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதனையடுத்து குறிப்பிட்ட அந்த பேருந்தை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய திருவெற்றியூர் போலீஸார், உள்ளே சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மாநிலக் கல்லூரி, ஜெயின் கல்லூரி மாணவர்கள், பேருந்தில் ஆபாச பாடல்கள் பாடியபடி அட்டகாசம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இரண்டு பட்டா கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார், பேருந்தில் பயணித்த 10 கல்லூரி மாணவர்களையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 

மேலும் படிக்க - போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு

மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இதுமாதிரியான ஆயுத கலாச்சாரமும் தலை தூக்கியுள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்க அஞ்சி வருகின்றனர். படிக்கும் வயதில் கல்லூரி மாணவர்கள் இவ்வாறு பொறுப்பின்றி நடந்துகொள்வதோடு, ஆயுதங்களை வைத்து அராஜகம் செய்து வருகின்றனர். எனவே இவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow