தமிழ்நாடு

பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்... டயரில் சிக்கி பலியான கல்லூரி மாணவி

ஆரணி அருகே அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்கு முயன்ற கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே வீழுந்து பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி தலை நசுங்கி பலியானார்.

பேருந்தில் சீட் பிடிக்க அவசரம்... டயரில் சிக்கி பலியான கல்லூரி மாணவி
பேருந்தில் சீட் பிடிப்பதற்கு முயன்ற கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே வீழுந்து பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு மனைவி மற்றும் கௌரி, கௌசல்யா, கௌதமி ஆகிய 3 மகள்கள் மற்றும் தமிழ்செல்வன் என்ற மகனுடன் வாழ்ந்து வருகின்றார்.

மேலும், கௌதமி என்ற மகள் பி.எஸ்.சி படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக கண்ணமங்கலத்தில் இயங்கி வரும் டி.என்.பி..எஸ்‌.சி பயிற்சி முகாமில் பயின்று வருகின்றார். இன்று புதன்கிழமை [07-11-23] வழக்கம் போல் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி படிப்பு முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார்.

அப்போது போளுரிலிருந்து கண்ணமங்கலம் வழியாக ரெட்டிபாளையம் செல்லும் அரசு பேருந்து வந்த போது கல்லூரி மாணவி கௌதமி பேருந்தில் சீட் பிடிப்பதற்காக முயன்று பேருந்தில் ஏற முயன்றார். திடிரென டிரைவர் பேருந்தை பின்நோக்கி நகர்த்திய போது நிலைதடுமாறி கீழே விழுந்த கௌதமி பேருந்தின் பின் டயரில் சிக்கினார்.

இதில், கல்லூரி மாணவி கவுதமி தலை நசுங்கி சம்பவடத்திலேயே பலியானார். தகவலறிந்த வந்த கண்ணமங்கலம் போலீசார் கௌதமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த கல்லூரி மாணவி தந்தை ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் சீட் பிடிப்பதற்காக முயன்ற கல்லூரி மாணவி பேருந்தின் டயரில் சிக்கி தலைநசுங்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.